BiggBoss10: ``போனவாரமே சொல்லிருக்கனும்... அதான் இப்போ சொல்றோம்" - விஜய் சேதுபதி

Sep 19, 2026 - 21:31
0
BiggBoss10: ``போனவாரமே சொல்லிருக்கனும்... அதான் இப்போ சொல்றோம்" - விஜய் சேதுபதி

விஜய் தொலைக்காட்சியில் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்த பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சி கடந்த செப். 6 ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது. விஜய் சேதுபதியே இந்த புதிய சீசனையும் தொகுத்து வழங்குகிறார். கடந்த சனிக்கிழமை ஒளிபரப்பான நிகழ்ச்சியில் ஷாதிகா தலைவர் பதவி குறித்து காட்டமாக விமர்சித்திருந்தார். நடிகர் விஜய் சேதுபதி பேசியது இணையத்தில் வைரலானது. அவர் பேசியதற்கு ஆதரவாகவும் எதிராகவும் சமூக ஊடகங்களில் கருத்துகள் பகிரப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், இது குறித்து விஜய் தொலைக்காட்சி நிர்வாகம் விளக்கம் அளித்தது.

விஜய் சேதுபதி
விஜய் சேதுபதி

அதில், ``பிக் பாஸ் 10 நிகழ்ச்சி பொழுதுபோக்குக்காக நடத்தப்படும் நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியில் குறிப்பிடும் கருத்துகள் அல்லது சம்பவங்களை, வெளியே இருக்கும் எந்தவொரு தனிநபர், அல்லது அமைப்பு போன்றவற்றை குறித்து, கருத்து தெரிவிப்பதாகவோ கருதக்கூடாது." என விளக்கமளித்தது. இந்த நிலையில், இன்று வெளியான பிக்பாஸ் புரோமோவில் விஜய் சேதுபதி, ``இந்த மேடையில நாங்க பேசுற கருத்துக்கள் எல்லாமே இந்த வீட்ல இருக்கிற என்னுடைய கன்டென்டஸ்டக்கும் எங்களுக்குமானது மட்டுமே.

இது வெளியிலிருக்கும் யாரையும், எந்த அமைப்பையும் சார்ந்து குறிப்பிடுவது அல்ல என்பதை திட்டவட்டமாக தெரிவித்துக் கொள்கிறோம். இதை நான் சொல்லாமலே உங்களுக்கு எல்லாம் புரிஞ்சிருக்கும்னு நினைச்சேன். இதை போன வாரம் சொல்லி இருக்கணும் சரி சொல்ல வேண்டிய தேவையாகி போச்சு... அதான் சொல்றோம்." எனக் குறிப்பிட்டிருக்கிறார். இன்றைய நிகழ்ச்சியில் என்ன நடக்கவிருக்கிறது என்பதைப் பொருத்திருந்து பார்க்கலாம்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User