ரஷ்யாவுடன் டீசல் 'டீல்' போட்ட ட்ரம்ப்; இப்போது குற்றச்சாட்டுகளை ஐரோப்பா பக்கம் திருப்புகிறார்!

Oct 13, 2026 - 12:30
0
ரஷ்யாவுடன் டீசல் 'டீல்' போட்ட ட்ரம்ப்; இப்போது குற்றச்சாட்டுகளை ஐரோப்பா பக்கம் திருப்புகிறார்!

ரஷ்யாவுடன் வணிகம் செய்யக்கூடாது. அப்படி வணிகம் செய்யும் டாப் 5 நாடுகள் மீது இரண்டாம் கட்ட வரி விதிக்கப்படும் என்றும்,

ரஷ்யாவிடமிருந்து எரிபொருள் இறக்குமதி செய்பவர்கள் உக்ரைன் போருக்கு நிதி அளிக்கிறார்கள் என்றும் ரஷ்யாவிற்கு நெருக்கடி கொடுக்க அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அனைத்து வழிகளிலும் முயன்றார்.

ட்ரம்ப் 'அந்தர்பல்டி'

ஆனால், இப்போது அப்படியே அந்தர்பல்டி அடித்து ரஷ்யாவுடன் அமெரிக்காவிற்கான டீசல் ஒப்பந்தத்தைப் போட்டுள்ளார் ட்ரம்ப்.

ட்ரம்பின் இந்தத் திடீர் நகர்விற்கு உக்ரைனும், ஐரோப்பிய நாடுகளும் கடும் அதிருப்தியைப் பதிவு செய்துள்ளன.

ஐரோப்ப ஒன்றியம்: ட்ரம்ப் பதிவு
ஐரோப்ப ஒன்றியம்: ட்ரம்ப் பதிவு

ஐரோப்ப ஒன்றியமும் தான்...

இதனால், ஐரோப்பிய ஒன்றியத்தின் குற்றச்சாட்டிற்குத் தனது ட்ரூத் சமூக வலைதளப் பக்கத்தில் பதில் அளித்திருக்கிறார் ட்ரம்ப்.

அவர் தனது பதிவில், “ஐரோப்பிய ஒன்றியம் ரஷ்யாவிற்கு எரிசக்திக்காக 250 பில்லியன் டாலர்களைக் கொடுத்துள்ளது.

ஆனால் போலிச் செய்தி ஊடகங்கள் இந்தச் செய்தியின் பக்கமே செல்லவில்லை. அமெரிக்க மக்களுக்காக நான் சரியான முடிவையே எடுத்தேன். எப்போதும், அமெரிக்காவிற்கே முதலிடம்!” என்று குறிப்பிட்டுள்ளார்.

ஈரானுக்கு ரஷ்யாவும், சீனாவும் உதவியா?

ஈரான் போரில் ஈரானுக்கு ரஷ்யாவும், சீனாவும் உதவுகிறது. அப்படியிருக்கையில் ரஷ்யாவிடமே ஒப்பந்தமா என்கிற கோணத்திலும் ட்ரம்ப்பிடம் பலர் கேள்வி எழுப்பினர்.

இதற்குத் தனது ட்ரூத் சமூக வலைதளப் பக்கத்தில், “சீனாவும் ரஷ்யாவும் ஈரானிய இஸ்லாமியக் குடியரசிற்கு உதவி செய்வதாகத் தீவிர இடதுசாரி முட்டாள்கள் கூறும் கருத்துகளை நான் பார்க்கிறேன்.

ஈரான் உதவி: ட்ரம்ப் பதிவு
ஈரான் உதவி: ட்ரம்ப் பதிவு

அவர்கள் உதவுவதாகவே இருந்தாலும், அது மிகக் குறைந்த அளவுதான்.

ஆனால் அவர்கள் உதவுவதாக நான் நம்பவில்லை.

அப்படி ஒன்று நடக்குமானால், அது நமக்கு உடனடியாகவும், மிக வேகமாகவும் தெரியவந்துவிடும்!” என்று பதிவிட்டுள்ளார் ட்ரம்ப்.

ரஷ்யாவுடன் ஒப்பந்தம் என்று தனக்கு எதிராக எழுந்த குற்றச்சாட்டை ஐரோப்பிய ஒன்றியத்தின் பக்கம் டிராக் மாற்றியுள்ளார் ட்ரம்ப்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User