Tata Sons பிரச்னை: "இந்தியத் தொழில் துறை மோடி, ஷாவின் விளையாட்டுப் பொருள் அல்ல" - ராகுல் சாடல்

Oct 28, 2026 - 12:30
0
Tata Sons பிரச்னை: "இந்தியத் தொழில் துறை மோடி, ஷாவின் விளையாட்டுப் பொருள் அல்ல" - ராகுல் சாடல்

டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைமை மற்றும் டாடா சன்ஸ் நிறுவனத்தை பங்குச்சந்தையில் பட்டியலிடுவது டாடா குழுமத்தில் பெரிய பிரச்னையாக ஓடிக்கொண்டிருக்கிறது.

நோயல் டாடா கடிதம்

டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவராக என்.சந்திரசேகரன் நீடிப்பதில் தனக்கு விருப்பமில்லை என்று டாடா அறக்கட்டளையின் தலைவர் நோயல் டாடா சமீபத்தில் டாடா சன்ஸ் நிறுவனத்திற்கு கடிதம் எழுதியிருந்தார்.

மோடிக்கு பார்சி அமைப்பு கடிதம்

தேசத்தின் நலன்கனில் தொடர்ந்து முதலீடு செய்து வரும் டாடா குழுமத்தில் பிரச்னை என்பதை இந்திய பிரதமர் மோடி கவனிக்க வேண்டும் என்று கடந்த அக்டோபர் 7-ம் தேதி, மோடிக்கு கடிதம் எழுதியிருந்தது மும்பை பார்சி பஞ்சாயத்து மற்றும் பிற ஜொராஸ்ட்ரிய அமைப்புகள்.

ராகுல் காந்தி பதிவு
ராகுல் காந்தி பதிவு

இந்த நிலையில், ராகுல் காந்தி டாடா நிறுவனத்தின் பிரச்னை குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்...

"டாடா நிறுவனம் குற்றவியல் ரீதியாகச் சீரழிக்கப்பட்டு வருகிறது. ஆனால் எந்த ஒரு வணிகத் தலைவரும் ஒரு வார்த்தை கூட பேசத் துணியவில்லை.

எத்தனை காலம் தான் அமைதியாக இருப்பீர்கள்? அவர்கள் உங்களையே முழுமையாகக் கட்டுப்படுத்தும் வரை அமைதி காக்கப் போகிறீர்களா?

இந்தியத் தொழில் துறை என்பது மோடி உடைய... ஷாவின் உடைய விளையாட்டுப் பொருள் அல்ல. உங்களுக்குக் தைரியம் இல்லை. ஆனால் எங்களுக்கு இருக்கிறது. இந்த அநீதிகளுக்கு நிச்சயம் நீதியைப் பெற்றுத் தருவோம்."

ஆனால், ராகுல் காந்தி டாடா குழுமத்தின் பிரச்னையில் மோடி, அமித் ஷா பங்கு என்னவென்பதை தெளிவாக குறிப்பிடவில்லை.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User