அமைச்சர் செங்கோட்டையன் மருத்துவமனையில் திடீர் அனுமதி – காரணம் என்ன?

May 24, 2026 - 18:02
0
அமைச்சர் செங்கோட்டையன் மருத்துவமனையில் திடீர் அனுமதி – காரணம் என்ன?

கடந்த சில நாட்களுக்கு முன்பு அமைச்சர் செங்கோட்டையனிடம் இருந்த நிதித்துறைக்கு பதிலாக வருவாய்த் துறை வழங்கப்பட்டது. அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு தொடர்ந்து சென்னைக்கும், ஈரோட்டில் உள்ள அவரது சொந்த ஊரான குள்ளப்பாளையத்திற்கும் மாறி மாறி சென்று வந்தார். இந்த நிலையில் அமைச்சர் செங்கோட்டையனுக்கு நேற்று திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து கோவை அவிநாசி சாலையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் வருவாய் துறை அமைச்சர் செங்கோட்டையன் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது குறித்து மருத்துவமனை நிர்வாகத்தினர் கூறுகையில், “செங்கோட்டையன் லேசான காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது அவருக்கு காய்ச்சல் முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. சோர்வு காரணமாக மருத்துவர்கள் அறிவுரைப்படி மருத்துவமனையில் ஓய்வு எடுத்து வருகிறார். மருத்துவமனையில் இருந்து நாளை காலை டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்” எனத் தெரிவித்தனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User