முரசு புயல்: எப்போது கரையைக் கடக்கிறது? தமிழகத்தில் எங்கெல்லாம் மழை? Latest Update

Nov 02, 2026 - 16:00
0
முரசு புயல்: எப்போது கரையைக் கடக்கிறது? தமிழகத்தில் எங்கெல்லாம் மழை? Latest Update

முரசு புயலின் லேட்டஸ்ட் அப்டேட்டை இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது.

இந்திய வானிலை மையத்தின் எக்ஸ் தளப் பதிவின் படி, "மத்திய-மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடலில் நிலவிய முரசு எனும் கடும் புயல், கடந்த 6 மணி நேரத்தில் மணி நேரத்திற்கு 22 கி.மீ வேகத்தில் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று (நவம்பர் 2) காலை 8:30 மணி அளவில் மத்திய-மேற்கு வங்கக்கடலில் மையம் கொண்டுள்ளது.

இது நெல்லூருக்கு (ஆந்திரப் பிரதேசம்) கிழக்கே - தென்கிழக்கே சுமார் 160 கி.மீ தொலைவிலும், சென்னைக்கு (தமிழ்நாடு) வடகிழக்கே 180 கி.மீ தொலைவிலும்,

காவாலிக்கு (ஆந்திரப் பிரதேசம்) கிழக்கே - தென்கிழக்கே 180 கி.மீ தொலைவிலும், ஓங்கோலுக்கு (ஆந்திரப் பிரதேசம்) தென்கிழக்கே 210 கி.மீ தொலையிவிம், மச்சிலிப்பட்டணத்திற்கு (ஆந்திரப் பிரதேசம்) தெற்கே 240 கி.மீ தொலைவிலும் நிலைகொண்டுள்ளது.

இது மேலும் வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று (நவம்பர் 2) நள்ளிரவு (இரவு 11:30 மணி) முதல் நாளை (நவம்பர் 03) அதிகாலை (காலை 04:00 மணி) இடைப்பட்ட காலத்தில், தெற்கு ஆந்திரக் கடலோரப் பகுதியான நெல்லூர் மற்றும் நர்சாபூர் இடையே,

ஓங்கோலுக்குத் தெற்கே, மணி நேரத்திற்கு 100 முதல் 110 கி.மீ வேகத்திலும் இடை இடையே 120 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும் பலத்த காற்றுடன் கடும் புயலாகக் கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்றைய (நவம்பர் 1), சென்னை வானிலை மையத்தின் தகவலின் படி, இன்றும் (நவம்பர் 2), நாளையும் (நவம்பர் 3) தமிழ்நாட்டில் எங்கெல்லாம் மழை பெய்யும்?

நவம்பர் 2, 2026
நவம்பர் 2, 2026
நவம்பர் 3, 2026
நவம்பர் 3, 2026

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User