ஸ்டாலின் - விஜய் சந்திப்பு: ஆரத்தழுவி வரவேற்ற உதயநிதி, கைபிடித்து அழைத்துச் சென்ற ஸ்டாலின்!

May 11, 2026 - 16:31
0
ஸ்டாலின் - விஜய் சந்திப்பு: ஆரத்தழுவி வரவேற்ற உதயநிதி, கைபிடித்து அழைத்துச் சென்ற ஸ்டாலின்!

தமிழகத்தின் புதிய முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் சி. ஜோசப் விஜய், முன்னாள் முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலினை சந்தித்துப் பேசினார்.

நடந்துமுடிந்த சட்டமன்றத் தேர்தலில் தவெக 108 இடங்களை வென்று ஆட்சியைக் கைப்பற்றியது. 74 இடங்களில் வென்ற திமுக-வின் கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் தவெக தலைவர் விஜய் ஆட்சியமைத்திருக்கிறார். அரசுப் பொறுப்பேற்ற பிறகு ஸ்டாலின் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்திருந்தார்.

நேற்று முதல்வர் பதவிப் பிரமாணம் முடிந்ததும், முதல்வர் ஆற்றிய உரையில், 'முந்தைய ஆட்சி ரூ10-லட்சத்துக்கும் மேல் கடன் வைத்திருக்கிறது. எது எது எந்த லட்சணத்தில் இருக்கிறது என இன்னும் அரசுக்குள் சென்று பார்க்கவில்லை' என விமர்சித்திருந்தார்.

தேர்தல் பிரசாரத்தின் போதும், திமுக மீதான விமர்சனங்களை மையப்படுத்தியே அவரின் பிரசாரம் அமைந்திருந்தது. இந்த நிலையில்தான் பதவிப் பிரமாணத்துக்குப் பிறகான விமர்சனமும் அணுகப்பட்டது.

முதல்வர் விஜய்-யின் விமர்சனத்துக்கு முன்னாள் முதல்வர் ஸ்டாலினும் தன் எக்ஸ் பக்கத்தில், ``ஒரு அரசுக்கு என்ன வரம்போ அந்த வரம்புக்குள்ளேயேதான் கடன் வாங்கியிருந்தோம். இதுபோன்ற சிக்கலைக் கடந்துதான் தமிழ்நாட்டு மக்களுக்கு பல்வேறு திட்டங்களை முன்னெடுத்தோம். எனவே, மக்களுக்கு செய்ய வேண்டும் என்ற மனது இருந்தால் போதும்." என பதிலளித்திருந்தார்.

இந்த நிலையில்தான் இன்று சட்டமன்றத்தில் எம்.எல்.ஏ-களின் பதவி பிரமாணம் நடைபெற்றது. இதற்கிடையில், முதல்வர் விஜய் ஸ்டாலினை சந்திக்கவிருக்கிறார் என்ற தகவலும் வெளியானது. அதன் அடிப்படையில், மதியத்திலிருந்து ஸ்டாலின் தங்கியிருக்கும் ஆள்வார்பேட்டை இல்லத்துக்கு முன்னாள் அமைச்சர்கள் அன்பில் மகேஷ், எ.வ.வேலு, உதயநிதி ஸ்டாலின், அனிதா ராதாகிருஷ்ணன், சேகர்பாபு உள்ளிட்டவர்கள் வருகை தந்தனர். அதைத் தொடர்ந்து ஸ்டாலினை சந்திக்க வருகை தந்த விஜய்யை உதயநிதி ஸ்டாலின், சிரித்த முகத்துடன் கட்டித் தழுவி வரவேற்றார்.

ஸ்டாலினை சந்தித்த விஜய்
ஸ்டாலினை சந்தித்த விஜய்

அதைத் தொடர்ந்து திமுக தலைவர் ஸ்டாலின் விஜய்-யின் கைப் பிடித்து அழைத்துச் சென்றார். பின்னர், முதல்வர் ஸ்டாலினுக்கு பூங்கொத்து கொடுத்தும், பொன்னாடை போர்த்தியும் மரியாதை செய்தார் முதல்வர் விஜய். அதைத் தொடர்ந்து, ஸ்டாலினும் முதல்வர் விஜய்க்குபொன்னாடை போர்த்தி வாழ்த்தினார். சுமார் 30 நிமிடங்கள் நீடித்த இந்தச் சந்திப்பின் போது இருவரும் பரஸ்பரம் மரியாதை செலுத்திக்கொண்டு பேசிக்கொண்டனர். தொடர்ந்து விஜய் மதிமுக பொதுச் செயலாளர் வைகோவை சந்திக்க அவரின் அண்ணா நகர் இல்லத்துக்கு புறப்பட்டுச் சென்றார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User