SRH vs PBKS: "அதில் கோட்டை விட்டுவிட்டோம்; தோல்விக்கு அதுவே காரணம்!" - ஸ்ரேயாஸ் ஐயர் வருத்தம்

May 07, 2026 - 13:31
0
SRH vs PBKS: "அதில் கோட்டை விட்டுவிட்டோம்; தோல்விக்கு அதுவே காரணம்!" - ஸ்ரேயாஸ் ஐயர் வருத்தம்

நடப்பு ஐ.பி.எல். தொடரில் நேற்று (மே 6) நடைபெற்ற பஞ்சாப் vs ஹைதராபாத் போட்டியில், 33 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில்14 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்கிறது ஹைதராபாத் அணி.

SRH vs PBKS
SRH vs PBKS

தொடரின் ஆரம்பத்தில் தோல்வியே காணாத அணியாக இருந்தாலும், தற்போது வரிசையாகத் தொடர்ந்து மூன்று போட்டிகளில் தோல்வியைத் தழுவி சற்றுத் தடுமாறி வருகிறது பஞ்சாப் அணி.

இந்தத் தோல்வி குறித்துப் பேசிய கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர், "இலக்கு சற்று அதிகமாகவே இருந்தது. தொடக்கத்திலேயே நாங்கள் பல கேட்சுகளைக் கோட்டை விட்டோம்.

ஒருவேளை அந்த வாய்ப்புகளைச் சரியாகப் பயன்படுத்தியிருந்தால், ஹைதராபாத் அணியின் ஸ்கோரை 30 முதல் 40 ரன்கள் வரை தடுத்திருக்கலாம். ஆட்டம் செல்லச் செல்ல விக்கெட் மெதுவாகத் தொடங்கியது. கட்டர் பந்துகள் ஓரளவுக்குக் கைகொடுத்தன.

ஆனால், ஃபீல்டிங், பந்துவீச்சு, பேட்டிங் என ஓர் அணியாக நாங்கள் முழுமையான ஆட்டத்தை வெளிப்படுத்தத் தவறிவிட்டோம். அதே சமயம், சன்ரைசர்ஸ் அணி மிகச் சிறப்பான மற்றும் முதிர்ச்சியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றிக்கு எப்படிப் போராட வேண்டும் என்பதைக் காட்டினர்.

SRH vs PBKS
SRH vs PBKS

நாங்கள் இந்தத் தொடரை நல்ல தொடக்கமாகத்தான் ஆரம்பித்தோம். அனைவருமே நல்ல மனநிலையில் இருந்தனர். அதே நேர்மறையான எண்ணத்தைத் தொடர்வது அவசியம்.

தோல்விகளால் மனம் தளராமல், கடந்த மூன்று போட்டிகளில் செய்த தவறுகளை ஆய்வு செய்து, மீண்டும் பலமாகத் திரும்புவோம். கானொல்லி ஓர் அற்புதமான வீரர். அவருடைய தைரியம் மற்ற வீரர்களுக்குப் பாடம்.

நெருக்கடியான சூழலிலும் பெரிய ரன்களைக் குவிக்கும் ஆற்றல் அவருக்கு இருக்கிறது. இந்தத் தோல்வியில் இருந்து பாடம் கற்றுக்கொண்டு அடுத்த போட்டியில் மீண்டு வரவேண்டும்" என்று பேசியிருக்கிறார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User