இளம்பெண்ணை வெட்டிக் கொன்றுவிட்டு, லாரியில் பாய்ந்து உயிரை மாய்த்த இளைஞர் - கிருஷ்ணகிரியில் அதிர்ச்சி

Oct 26, 2026 - 17:30
0
இளம்பெண்ணை வெட்டிக் கொன்றுவிட்டு, லாரியில் பாய்ந்து உயிரை மாய்த்த இளைஞர் - கிருஷ்ணகிரியில் அதிர்ச்சி

காதலியை வெட்டிக் கொன்றுவிட்டு, லாரி முன் விழுந்து காதலனும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம், கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே பாகலுரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி

திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை வட்டாரத்தைச் சேர்ந்தவர் பிரதீப் (21), பொன்னேரி அருகே ராமனூரைச் சேர்ந்தவர் திவிஜா ஸ்ரீ (20).

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள பாகலூர் தனியார் நிறுவனத்தில் பிரதீப்பும், ஓசூர் தனியார் நிறுவனத்தில் திவிஜா ஸ்ரீயும் பணியாற்றி வந்தனர். இருவரும் ஏற்கெனவே திருப்பத்துர் அருகேயுள்ள கல்லூரியில் படித்தபோது காதலித்து வந்த நிலையில், தற்போது ஓசூர் பகுதயில் இருவரும் பணியாற்றி வந்ததால் அடிக்கடி சந்தித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் கடந்த 24 ஆம் தேதி இரவு தான் தங்கியிருந்த அறைக்கு திவிஜா ஸ்ரீயை பிரதீப் அழைத்து வந்துள்ளார். பேசிக்கொண்டிருந்த இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு, திவிஜா ஸ்ரீயை அரிவாளால் வெட்டிக் கொலைசெய்துள்ளார் பிரதீப். அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் தகவல் அளித்ததைத் தொடர்ந்து, பாகலூர் போலீஸார் விரைந்து வந்து திவிஜா ஸ்ரீயின் உடலை மீட்டு, மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு பிரதீப்பை தேடத் தொடங்கினர்.

திவிஜா ஸ்ரீ - பிரதீப்

போலீஸார் வருவதற்கு முன்பே அங்கிருந்து கிளம்பிய பிரதீப், சாலையில் விரைவாக வந்து கொண்டிருந்த லாரி முன் பாய்ந்துள்ளார். லாரி சக்கரங்கள் ஏறி கடுமையாகக் காயமடைந்தவரை மீட்ட போலீஸார், மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார்.

இது குறித்த போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில், இருவரும் பல மாதங்களாக காதலித்து வந்த நிலையில் அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் பிரதீப், திவிஜா ஸ்ரீயைக் கொலை செய்துவிட்டு தற்கொலை செய்திருக்கிறார் என்று தெரிய வந்துள்ளது. மேலும், இந்தச் சம்பவத்திற்கு வேறு ஏதும் காரணம் உள்ளதா என்பதையும் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User