'தாயிடம் யாசகம் வாங்கணும்' - 15 வயதில் காணாமல் போனவர் 65 வயதில் சாமியாராகத் திரும்பிய சுவாரஸ்யம்!

Jun 08, 2026 - 15:31
0
'தாயிடம் யாசகம் வாங்கணும்' - 15 வயதில் காணாமல் போனவர் 65 வயதில் சாமியாராகத் திரும்பிய சுவாரஸ்யம்!

குழந்தைகள் சிறுவயதில் பெற்றோரிடம் கோபித்துக்கொண்டு வீட்டை விட்டு செல்வதுண்டு. அவர்கள் சில ஆண்டுகள் கழித்து திரும்ப வந்துவிடுவதுண்டு. ஒரு சிலர் அப்படி திரும்ப வராமலே போய்விடுவர்.

காணாமல் போய் பல சகாப்தங்கள் தாண்டி சொந்த ஊருக்கு வந்து ஆச்சரியம் கொடுத்த பல சம்பவங்கள் நடந்திருக்கின்றன. மத்தியப் பிரதேசத்திலும் அது போன்ற ஒரு சம்பவம் நடந்திருக்கிறது. அங்குள்ள பித்தோராகர் அருகில் உள்ள தெளலிகட் என்ற கிராமத்தைச் சேர்ந்த புத்தி பல்லப் உபாத்யாயா என்பவர் தனது வீட்டை விட்டு தனது 15 வயதில் காணாமல் போனார்.

அவரைக் கண்டுபிடிக்க அவரது தந்தை தாராதத் பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. அதன் பிறகு தேடுவதைக் கைவிட்டுவிட்டனர். அவரது தந்தை இறந்தும் போனார். இந்நிலையில் அக்கிராமத்திற்கு மிகப்பெரிய தாடி வைத்த நிலையில் சன்னியாசி ஒருவர் அங்கு வசிக்கும் நந்தி தேவி வீட்டிற்கு யாசகம் பெற வந்தார்.

யாசகம் பெற வந்தவர்
யாசகம் பெற வந்தவர்

அங்கு வீட்டில் வயதான நந்திதேவி மட்டும் இருந்தார். அவரிடம் யாசகம் பெற வந்தவர் நந்தி தேதியிடம், தான் வீட்டைவிட்டு வெளியேறிய உங்களது மகன் புத்தி பல்லப் உபாத்யாயா(61) என்று தெரிவித்தார். புத்தி பல்லப் காணாமல் போய் 45 ஆண்டுகள் ஆன நிலையில் மகன் திரும்ப வந்ததை நினைத்து அவரது தாயார் ஆனந்த கண்ணீர் வடித்தார். நந்தி தேவி தாடி வைத்த சாதுவை மரியாதையுடன் வரவேற்றார். அவரிடம் தங்களுடன் தங்கும்படி கேட்டுக்கொண்டார்.

ஆனால் தான் இங்கு தொடர்ந்து இருக்க வரவில்லை என்றும், வயதான சாதுவாக சன்னியாச சடங்குகளை முடிக்க தனது தாயிடமிருந்து யாசகம் பெற வந்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார். புத்தி பல்லப் தனது பெயர் புத்தநாத் என்றும், தன்னால் இங்கு தொடர்ந்து தங்கி இருக்க முடியாது என்று தெரிவித்தார்.

அவரைக் காண கிராமத்தினர் கூடினர். அவர்களிடம், வீட்டை விட்டு வெளியேறிய பிறகு, அவர் சிறிது நேரம் லாரிகளிலும் பிற போக்குவரத்து நிறுவனங்களிலும் பணிபுரிந்ததாகத் தெரிவித்தார். பின்னர் படிப்படியாக கோயில்கள் மற்றும் மத வாழ்க்கைக்குத் திரும்பியதாக புத்த நாத் கிராமவாசிகளிடம் கூறினார். பின்னர் அவர் ராஜஸ்தானின் பிகானேரில் குடியேறினார்.

அங்கு அவர் தற்போது ஒரு கோவிலில் வசிக்கிறார். அவர் கிராமத்தில் நிரந்தரமாக வசிக்க வரவில்லை என்றும், சன்யாக்களுடன் தொடர்புடைய ஒரு சடங்கு கடமையை முடிக்க வந்திருப்பதாகக் கூறினார். தனது ஆன்மிக குரு நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். அவர் இறப்பதற்கு முன், அவர் என்னிடம், உனது சொந்த ஊருக்குச் சென்று அம்மாவின் கைகளில் இருந்து யாசகம் பெறச் சொன்னார். அந்தக் கடமையை நிறைவேற்றுவதற்காக மட்டுமே நான் வந்துள்ளேன் என்று அவர் கூறினார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User