’பொய்க்குற்றச்சாட்டில் கைது, அலைக்கழிப்பு, சிரித்து கேலி செய்த போலீஸ்’- NTK கார்த்திகா குற்றச்சாட்டு

Oct 23, 2026 - 13:02
0
’பொய்க்குற்றச்சாட்டில் கைது, அலைக்கழிப்பு, சிரித்து கேலி செய்த போலீஸ்’- NTK கார்த்திகா குற்றச்சாட்டு

தாராபுரம் இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் கார்த்திகா, முதலமைச்சரின் கான்வாய் வாகனத்தை மறித்து வாக்கு கேட்டதாக கார்த்திகா மீது குற்றம் சாட்டப்பட்டது.

இது தொடர்பாக வழக்கு தொடரப்பட்டிருந்த நிலையில், கடந்த 21ம் தேதி அதிகாலை தாராபுரம் போலீசார், கோவையில் அவரைக் கைது செய்தனர். பின்னர் கோவை மத்திய சிறையில் கார்த்திகா அடைக்கப்பட்டு இருந்த நிலையில், கார்த்திகா உட்பட 7 பேருக்கும் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.

இதனைத்தொடர்ந்து, இன்று காலை கார்த்திகா கோவை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார். அப்போது அங்கு திரண்ட நாம் தமிழர் கட்சியினர் கார்த்திகாவிற்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “எங்கள் தூத்துக்குடி முத்து, வ.உ.சிதம்பரனார் இருந்த சிறை இது. தமிழர்களைக் காத்து வரும் சீமான் இருந்த மத்திய சிறை இது. இந்தச் சிறையில் பொய்க் குற்றச்சாட்டுகளைச் சுமத்தி எங்களை சிறையில் தள்ளிய தமிழ்நாட்டு தற்குறி முதல்வருக்கு நன்றி.

வரலாற்று பெருமை மிக்க சிறையில் இருந்தது, எங்களுக்கு வாழ்நாள் பெருமை. அக்டோபர் 4 ஆம் தேதி முதல்வர் மட்டுமே பரப்புரை மேற்கொள்ள வேண்டும், மற்றவர்கள் செய்யக் கூடாது என்பது ஜனநாயகத்திற்கு எதிரானது. வேட்பாளர்களாகிய எங்களுக்கு வாக்கு கேட்க உரிமை உள்ளது. நான் ஊழல் குற்றவாளி அல்ல.

கார்த்திகா
கார்த்திகா

பண வீக்கம் அதிகம் கொண்டுள்ள மாநிலம் தமிழ்நாடு. வேலை வாய்ப்பு இல்லை. மக்களை பஞ்சத்திற்கு ஆளாகி சிரமப்பட்டு வருகின்றனர். ஆட்சி செய்யத் தெரியாமல், தங்கள் கையாலாகாததனத்தால் இது போன்ற கைது நடவடிக்கை செய்கிறார்கள். அனுமதிக்கப்பட்ட இடத்தில்தான் பிரசாரம் செய்தேன். ஓம் சக்தி பரா சக்தி என்று பேசி ஆட்சியை நடத்த முடியாது. கர்நாடகாவில் தண்ணீர் வாங்க முடியாமல் ஆந்திரா செல்கிறார் முதல்வர். கோமாளிகளிடம் ஆட்சி இல்லாமல், போராளிகளிடம் ஆட்சி கிடைக்க வேண்டும்.

முழுக்க பொய் குற்றச்சாட்டில் தான் என்னைக் கைது செய்தனர். காவல் துறையினரின் அதிகாலை கைது கொடூரமாக இருந்தது. வீட்டுக்குள் வந்தவர்கள் எனது கணவரை குண்டு கட்டாகத் தூக்கிச் சென்று கைது செய்தனர். எனது வலது காலை நடக்க முடியாமல் செய்து இருக்கின்றனர். பொய் புகாரில் ரிமாண்டிற்கு அழைத்துச் சென்ற போது, காவல் துறை அதிகாரிகள் ஒரே சிரிப்பு. கேலி செய்யும் விதமாக நக்கலாகச் சிரித்தார்கள்.

அதிகாலை மூன்று மணிக்கு அவர்கள் புகைப்படங்களும், காணொலிகளும் எடுத்துக் கொண்டே இருக்கிறார்கள். கல்லூரி மாணவர்கள் சினிமா திரையரங்கில் செய்வது போல இருந்தது. இப்படியே செய்ய வேண்டிய அவசியமே இல்லை. தாராபுரத்தில் இருந்து ஒன்றரை மணி நேரத்தில் கோவைக்கு வந்துவிடலாம். ஆனால் போக்குவரத்து நெரிசலற்ற அதிகாலை நேரத்தில் அலைக்கழித்து மூன்று மணி நேரத்திற்குப் பின்னரே கோவைக்கு அழைத்து வந்தனர்” எனத் தெரிவித்தார்.  

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User