"கனத்த இதயத்துடன் இந்தப் பிரிவை அறிவிக்கிறோம்..!"- பிரித்வி ஷா உடனான உறவை முறித்துக்கொண்ட அக்ரிதி

Sep 17, 2026 - 21:01
0
"கனத்த இதயத்துடன் இந்தப் பிரிவை அறிவிக்கிறோம்..!"- பிரித்வி ஷா உடனான உறவை முறித்துக்கொண்ட அக்ரிதி

இந்திய கிரிக்கெட் வீரர் பிரித்வி ஷா உடனான உறவை முறித்துக் கொள்வதாக அவரின் காதலி அக்ரிதி அகர்வால் அறிவித்திருக்கிறார்.

இருவருக்கும் 6 மாதங்களுக்கு முன் திருமண நிச்சயம் ஆன நிலையில், இருவரின் பாதை மற்றும் இலக்குகள் வெவ்வேறாக உள்ளதாக தெரிவித்துள்ளார்.

பிரித்வி ஷா -  அக்ரிதி அகர்வால்
பிரித்வி ஷா - அக்ரிதி அகர்வால்

இதுதொடர்பாக அக்ரிதி வெளியிட்டிருக்கும் பதிவில், "எங்களின் எதிர்கால இலக்குகளும், பாதைகளும் வெவ்வேறாக இருப்பதால் கனத்த இதயத்துடன் இந்தப் பிரிவை அறிவிக்கிறோம்.

நாங்கள் ஒருவர் மீது ஒருவர் அன்பும் அக்கறையும் கொண்டிருந்தாலும், எங்கள் பாதைகள் இனி ஒன்றாக இணையாது என்பதை ஏற்றுக்கொண்டிருக்கிறோம்.

எங்களின் பொறுப்புகள் மற்றும் நாங்கள் தற்போது எதிர்கொள்ளும் சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு, நாங்கள் இருவரும் தனித்தனி பாதையில் செல்ல முடிவு செய்திருக்கிறோம்.

நாங்கள் இருவரும் முன்னோக்கிச் செல்லும்போது, எங்கள் இருவருக்கும் நன்மையும், அமைதியும், மகிழ்ச்சியும் மட்டுமே கிடைக்க வேண்டும்.

பிரித்வி ஷா -  அக்ரிதி அகர்வால்
பிரித்வி ஷா - அக்ரிதி அகர்வால்

இந்த கடினமான நேரத்தில் எங்கள் தனிப்பட்ட உரிமையை மதிக்குமாறும், எங்கள் முடிவிற்கான காரணங்கள் குறித்து தேவையற்ற ஊகங்களையோ அல்லது யூகங்களையோ செய்ய வேண்டாம் என்றும் அனைவரையும் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்" என்று பதிவிட்டிருக்கிறார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User