Iran: போர் நிறுத்தத்தை மீறி தாக்கிக் கொள்ளும் அமெரிக்கா, ஈரான்; என்ன தான் சொல்கிறார்கள்?

Jun 11, 2026 - 08:31
0
Iran: போர் நிறுத்தத்தை மீறி தாக்கிக் கொள்ளும் அமெரிக்கா, ஈரான்; என்ன தான் சொல்கிறார்கள்?

'போர் விரைவில் முடிந்துவிடும்... பேச்சுவார்த்தை சுமூகமாகச் சென்று கொண்டிருக்கிறது' என்று சொல்லிக் கொண்டிருந்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப், 'ஈரான் கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும்' என்று மீண்டும் கூறத் தொடங்கியிருக்கிறார்.

அமெரிக்க ராணுவப் படை, அமெரிக்க ராணுவத் தளவாடங்கள் மற்றும் மத்திய கிழக்கு நாடுகள் மீது அவ்வப்போது ஈரான் நடத்தும் தாக்குதல்களால் அமெரிக்காவும் 'தற்காப்புத் தாக்குதலை' தொடர்ந்து நடத்தி வருகிறது.

அமெரிக்கா
அமெரிக்கா

ஈரானும் தன் பங்கிற்கு மத்திய கிழக்கு நாடுகள் மீது கடுமையான தாக்குதலை மீண்டும் நடத்துகிறது.

அமெரிக்க ராணுவத்தின் ஒரு பிரிவான மத்திய கட்டளையகம் (CENTCOM) தனது எக்ஸ் பதிவில், "அமெரிக்க அதிபரின் உத்தரவின் பேரில், அமெரிக்க மத்திய கட்டளையகப் படைகள் ஈரானில் உள்ள பல இலக்குகளுக்கு எதிராகக் கூடுதல் தற்காப்புத் தாக்குதல்களைத் தொடங்கின.

ஈரானின் அநியாயமான மற்றும் தொடர்ச்சியான ஆக்கிரமிப்புகளுக்குப் பதிலடியாகவே இந்தத் தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன" என்று பதிவிட்டிருக்கிறது.

இந்தத் தாக்குதலுக்கு ஈரான் ராணுவப் படை கூறுவதென்னவோ, "போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி, நாட்டின் தெற்குப் பகுதிகளில் பயங்கரவாத அமெரிக்க ராணுவம் ஆக்கிரமிப்புத் தாக்குதல்கள் நடத்தின.

அதற்கு பதிலடியாக, இஸ்லாமிய குடியரசு ஈரான் ராணுவம் பல்வேறு வகையான அழிவுகரமான ட்ரோன்களைப் பயன்படுத்தி, பஹ்ரைனில் உள்ள அமெரிக்காவின் 5-வது கடற்படைப் பிரிவைக் (US Fifth Fleet) குறிவைத்துத் தாக்குதல் நடத்தியுள்ளது" என்று சொல்கிறது.

ஆக, இரு நாடுகளும் மாறி மாறி குற்றம் சாட்டி போர் நிறுத்தத்தைத் தாண்டி, தாக்குதலைத் தொடங்கி தொடர்ந்து கொண்டிருக்கிறது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User