'இந்திய ரூபாய் மதிப்பு உயர்ந்தாலும், சாதகம் இல்லை' - காரணம் அமெரிக்காவா?

Jun 25, 2026 - 20:01
0
'இந்திய ரூபாய் மதிப்பு உயர்ந்தாலும், சாதகம் இல்லை' - காரணம் அமெரிக்காவா?

ஈரான் போரின் போது, இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.96-ஐ எல்லாம் தாண்டிச் சென்றது.

ஆனால், கடந்த ஒரு வாரமாக, இந்திய ரூபாய் கொஞ்சம் கொஞ்சமாக வலுவடைந்து, ரூ.94-95-க்கு இடையே வர்த்தகமாகி வருகிறது. இதற்கு மிக முக்கியக் காரணம் - ஈரான்-அமெரிக்கா புரிந்துணர்வு ஒப்பந்தம்.

ஈரான்-அமெரிக்கா புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்குப் பின், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை 80 டாலருக்குக் கீழ் வர்த்தகம் ஆகி வருகிறது.

இந்திய ரூபாய் மதிப்பு
இந்திய ரூபாய் மதிப்பு

இதனால், இந்தியாவிற்கு இறக்குமதி செலவு குறைகிறது. விலைவாசி முன்பு இருந்ததை விட குறைகிறது. ஆக, இந்திய ரூபாயும் வலுவடைந்து வருகிறது.

இன்னொரு பக்கம், இந்த நேரத்தில் அமெரிக்க டாலரும் வலுவாகி வருகிறது. இதனால், இது இந்திய ரூபாய் மதிப்பின் வலுவிற்கு முழு சாதகமாக அமையவில்லை.

அடுத்ததாக, அமெரிக்காவின் ஃபெடரல் வங்கி சில காலங்களுக்கு வட்டி விகிதத்தைக் குறைக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுவும் அமெரிக்க டாலரின் மதிப்பிற்குச் சாதகமாக அமைந்துள்ளது.

இந்திய ரூபாய் மதிப்பு வலுவாகிக் கொண்டிருக்கும் இதே வேளையில், அமெரிக்க டாலரும் வலுவாகி வருவதால், இந்தியாவிற்கு இறக்குமதி செலவுகள் அதிகம் குறையாது.

மேலும், முதலீட்டாளர்கள் அமெரிக்க முதலீடுகளை நோக்கிச் செல்வார்கள்.

இதனால், இந்திய ரூபாய் மதிப்பு வலுவாவது இந்தியாவிற்கு முழு சாதகமாக அமையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User