பூசல்களுக்கு மத்தியில் இன்று 'இந்தியா' கூட்டணி கூட்டம்; நடைபெறும் இடத்திலேயே ட்விஸ்ட் | Live updates

Jun 08, 2026 - 09:01
0
பூசல்களுக்கு மத்தியில் இன்று 'இந்தியா' கூட்டணி கூட்டம்; நடைபெறும் இடத்திலேயே ட்விஸ்ட் | Live updates

இன்று டெல்லியில் இந்தியா கூட்டணியின் கூட்டம்!

இன்று இந்தியா கூட்டணியின் கூட்டம் டெல்லியில் கூடுகிறது.

தமிழ்நாடு, மேற்கு வங்கம், கேரளா உள்ளிட்ட ஐந்து மாநிலத் தேர்தலுக்குப் பின் கூடும் இந்தியா கூட்டணியின் முதல் கூட்டம் இது.

அதனால், இதன் எதிர்பார்ப்புகள் மிக அதிகமாக உள்ளன.

காரணம், இந்தியா கூட்டணியில் உள்ள முக்கியக் கட்சிகளில் ஒன்று திமுக. அந்தக் கட்சி இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ளாது என்பதை ஏற்கெனவே அறிவித்துவிட்டது.

இன்னொரு முக்கியமான கட்சி - திரிணாமுல் காங்கிரஸ். அது கடந்த தேர்தலில், மேற்கு வங்கத்தில் கடும் சரிவைச் சந்தித்துள்ளது. இது திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜியின் தேசிய அரசியலுக்கு (தற்காலிக?) ஃபுல் ஸ்டாப் வைத்துள்ளது.

`இந்தியா’ கூட்டணி
`இந்தியா’ கூட்டணி

கேரளாவில் கம்யூனிஸ்ட் கட்சி தோல்வியைத் தழுவியுள்ளது. தேர்தலுக்கு முன்பே, மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி மற்றும் கேரளா எதிர்க்கட்சி தலைவர் பினராயி விஜயனுக்கு முட்டிக்கொண்டது. இப்போது நிலைமையை சொல்லவே தேவையில்லை.

ஆக, பல பூசல்களுக்கு மத்தியில் தான் இந்தக் கூட்டம் நடக்கிறது.

பொதுவாக, இந்தியா கூட்டணியின் கூட்டம் டெல்லியில் உள்ள ராகுல் காந்தி இல்லத்திலேயோ, இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இல்லத்திலேயோ தான் நடக்கும்.

ஆனால், தற்போதைய சூழலில், அது சரிவராது என்பதால், கூட்டத்தின் இடம் 'பொதுவான' இடமான 'கான்ஸ்டிடியூஷன் கிளப்பில்' நண்பகல் 12 மணிக்கு நடக்க உள்ளது.

இன்றைய இந்தியா மற்றும் தமிழ்நாடு அரசியல் நிகழ்வுகளை தெரிந்துகொள்ள இந்த Live Blog-ஐ தொடர்ந்து ஃபாலோ செய்யுங்க!

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User