எமனை அழவைத்த இமயம்!

Jun 11, 2026 - 16:02
0
எமனை அழவைத்த இமயம்!

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர்

எமனை அழவைத்த இமயம்!

பதினாறு வயது நாயகன்நீ!

பக்குவப் படங்கள் பலவற்றை

பாரினில் விதைத்த தூயவன்நீ!

தூல உடம்பே மரணிக்கும்உன்

துயரம் போக்கி நிகழ்விக்கும்!

அடைபட்டுக் கிடந்த படப்பிடிப்பை

அண்டவெளிக்குக் கொணர்ந்தவன் நீ!

அடிமட்ட மக்களின் உணர்ச்சிகளை

அழகாய்த் திரையில் கொடுத்தவன்நீ!

சப்பாணி என்றும் நிலைத்திருப்பான்

சரித்திரம்தனையே கடந்து நிற்பான்!

புதியவேதம் படைத்தே நீயும்

புதுமைக் கருத்துக்களைத் தூவிவிட்டாய்!

“பாலுத்தேவன் என்பது நீங்கள்

படித்து வாங்கிய பட்டமா”வென்று

பாலகன் கேட்பது மனதிலென்றும்

பசுமரத் தாணியாய் நின்றவொன்று!

ஓயாத அலைகள் ஓலமிட்டு

உந்தன்பெயரைக் கூவி நிற்கும்!

தாலியுமின்றி சிலுவையும் விடுத்து

தரணியில் நாங்கள் மனிதராகவே

வாழ்ந்தால் போதும் என்றகாதல்

வரலாற்றில் என்றும் நிலைத்தவொன்று!

மரியாதை என்பது திறமைக்கு

மகுடம் சூட்டும் பண்பாகும்!

பாரதிராஜா
பாரதிராஜா

முதல் மரியாதைக் குரியவனாக

முன்னேறினாய் நீயும் திரையுலகில்!

சாமி!எனக்கொரு உண்மை தெரிஞ்சாகணுமென்ற

சங்கேத வார்த்தைக்கு அழிவேயில்லை!

கடலோரம் அமர்ந்து எழுதும்கவிதை

கற்பனைதன்னில் அலைகளை மிஞ்சும்!

அலைகளைப் பார்க்கையில் உந்தன்படங்களே

அலையலையாய் மனதில் தோன்ற

கற்பனை எண்ணம் நீரில் மூழ்க

முத்தாய் ஒருநாள் மேல்வந்திடுமோ?!

உறவுகள் பலவற்றை உன்னைப்போலே

உதிரஉதிரத் திரையில் கொட்டியோர்

வேறுயாரும் இருப்பதாய் எனக்கும்

விபரம் ஏதும் கிடைத்திடவில்லை!

அரைநூற்றாண்டுத் திரை வாழ்க்கையில்

அணுகாத பட்டங்கள் ஏதுமில்லை!

அதனைச்சொல்ல இங்கு புகுந்தால்

அனுமன் வாலாய் மிகவும்நீளும்!

உந்தன்மீது பாசக்கயிற்றை வீசியபோது

எமனே அழுது புலம்பிநின்றாராம்!

-ரெ.ஆத்மநாதன்,

சூரிக்,சுவிஸ்.

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் முயற்சியே ‘My Vikatan’. இந்த ‘My Vikatan’ பிரிவில் பதிவாகும் கட்டுரைகளுக்கு என பிரத்யேகமான ஒரு வாட்ஸ்அப் கம்யூனிட்டி க்ரூப் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் இணைந்திருப்பதன் மூலம், ‘My Vikatan’கட்டுரைகள், ‘My Vikatan’ தொடர்பான அறிவிப்புகள் என அனைத்தையும் உடனே தெரிந்து கொள்ளலாம்..! இதில் இணைய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்க மக்களே...!

Link : https://chat.whatsapp.com/G7U0Xo0F63YA5PC6VgYMBQ

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User