"ஊழலற்ற அரசியல் தலைவராக நீங்கள் உயர்ந்து சிறக்க வாழ்த்துகிறேன்"- விஜய்க்கு ஏ.ஆர் ரஹ்மான் வாழ்த்து

May 04, 2026 - 21:02
0
"ஊழலற்ற அரசியல் தலைவராக நீங்கள் உயர்ந்து சிறக்க வாழ்த்துகிறேன்"- விஜய்க்கு ஏ.ஆர் ரஹ்மான் வாழ்த்து

234 சட்டமன்றத் தொகுதிகளில் விஜய்யின் தவெக 108 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது.

இந்நிலையில் தவெக தலைவர் விஜய்க்கு இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மான் வாழ்த்துகளைத் தெரிவித்திருக்கிறார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், "தமிழக வெற்றிக் கழகத்திற்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்!

தவெக விஜய்
தவெக விஜய்

அன்பிற்குரிய திரு. விஜய் அவர்களுக்கு, ஊழலற்ற அரசியல், சமூக நீதி மற்றும் சமத்துவம் ஆகியவற்றை நிலைநிறுத்தி, தமிழகத்தை முன்னெடுத்துச் செல்லும் ஒரு முன்மாதிரியான தலைவராக நீங்கள் உயர்ந்து சிறக்க வாழ்த்துகிறேன்.

பிரிவினைகளை மறந்து, தமிழையும் தமிழர்களையும் போற்றும் ஒரு அரசியல் பண்பாட்டுடன், சென்னையை கலை மற்றும் செழுமை நிறைந்த நகரமாக மாற்ற உங்கள் முயற்சி சிறந்து விளங்கட்டும்!" என்று பதிவிட்டிருக்கிறார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User