இலவச மாம்பழ விருந்து: அமெரிக்கப் பூங்காவைத் திருவிழாக்கோலமாக்கிய அசல் இந்திய மாம்பழங்கள்!

Jun 02, 2026 - 19:32
0
இலவச மாம்பழ விருந்து: அமெரிக்கப் பூங்காவைத் திருவிழாக்கோலமாக்கிய அசல் இந்திய மாம்பழங்கள்!

அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ பூங்கா ஒன்றில், இந்திய மாம்பழங்களுக்காக நடத்தப்பட்ட ஒரு பிரமாண்டமான "இலவச மாம்பழத் திருவிழா" அங்கிருந்த மக்களை ஒட்டுமொத்தமாகக் கவர்ந்து தற்போது இணையத்தில் பயங்கர வைரலாகி வருகிறது. அமெரிக்காவில் நிலவும் இந்திய மாம்பழங்களுக்கான தட்டுப்பாட்டிற்கு ஒரு ஜாலியான தீர்வாக இந்தத் தனித்துவமான மாம்பழ விருந்து ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.

வெறும் 8 நண்பர்களுடன் ஒரு சிறிய பெட்டி மாம்பழங்களை வைத்துத் தொடங்கப்பட்ட இந்தச் சந்திப்பு, தற்போ நூற்றுக்கணக்கான மக்கள் கொண்டாடும் ஒரு மாபெரும் சமூகத் திருவிழாவாக உருவெடுத்துள்ளது.

அங்கு இந்திய மாம்பழங்களின் வரத்து மிகவும் குறைவாக இருப்பதாலும், ஒரு பெட்டி மாம்பழத்தின் விலை மிக அதிகமாக விற்பனை செய்யப்படுவதாலும், இந்த இலவச மாம்பழ விருந்து மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. இந்தத் திருவிழாவிற்காக இந்தியாவின் பெருமைகளான அல்போன்சா, கேசர் மற்றும் சௌன்சா போன்ற சுவையான அசல் இந்திய மாம்பழ வகைகள் பிரத்யேகமாக வரவழைக்கப்பட்டிருந்தன.

இந்த விழாவில் கலந்துகொண்ட உள்ளூர் மக்கள், "நாங்கள் இதுவரை சாப்பிட்டதிலேயே மிகச் சிறந்த மாம்பழங்கள் இவைதான், வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவிற்கு அற்புதமாக இருந்தது" என்று தங்களின் சமூக வலைதளப் பக்கங்களில் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளனர். இந்தத் திருவிழா அங்கு வாழும் இந்தியர்களுக்குத் தங்களின் சிறுவயது கோடைகால நினைவுகளையும், தாயகத்தின் சுவையையும் மீட்டுத் தரும் ஓர் உணர்வுப்பூர்வமான நிகழ்வாக அமைந்தது.

உலக அளவில் விளையும் மொத்த மாம்பழங்களில் பாதியளவு இந்தியாவில்தான் விளைவிக்கப்படுகிறது என்றாலும், கடுமையான ஏற்றுமதி விதிகள் மற்றும் போக்குவரத்துச் சவால்கள் காரணமாக அதில் மிகக் குறைந்த அளவே வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதன் காரணமாகவே அமெரிக்காவில் இந்திய மாம்பழங்களுக்கு எப்போதுமே ஏகப்பட்ட தேவை நிலவி வருகிறது. இந்நிலையில், இந்தியாவின் முக்கனிகளில் முதலாவதான மாம்பழத்தின் சுவையை உலகினருக்குப் பறைசாற்றும் விதமாக நடத்தப்பட்ட இந்த மாம்பழத் திருவிழா, உலகெங்கிலும் பாராட்டுகளை அள்ளி வருகிறது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User