Dharman: `பேட்ட பத்தல சார், இன்னும் சேர்ந்து நடிக்கணும்னு சொன்னேன்'- ரஜினி குறித்து நெகிழும் சிம்ரன்

Jun 24, 2026 - 13:31
0
Dharman: `பேட்ட பத்தல சார், இன்னும் சேர்ந்து நடிக்கணும்னு சொன்னேன்'- ரஜினி குறித்து நெகிழும் சிம்ரன்

அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. அந்தப் படத்திற்கு 'தர்மன்' என்று தலைப்பிட்டிருக்கிறார்கள்.

Dharman - Rajinikanth - Ashwath Marimuthu
Dharman - Rajinikanth - Ashwath Marimuthu

ராஜ்கமல் நிறுவனம் சார்பில் கமல்ஹாசன் மற்றும் மகேந்திரன் தயாரிக்கும் இப்படத்தில் சிம்ரன், ராஷி கண்ணா முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். இப்படத்தின் டைட்டில் வெளியீட்டு விழா இன்று சென்னை ராஜ்கமல் அலுவலகத்தில் நடைபெற்றது.

சிம்ரன், "நான் ரொம்பவே சந்தோஷமாக ஃபீல் பண்றேன். ரஜினி சாரிடம் நான், 'பேட்ட பத்தல சார், உங்களோடு இன்னும் சேர்ந்து நடிக்கணும்'னு சொன்னேன்.

அந்த வாய்ப்புக்காக நான் ரொம்பவே காத்திருந்தேன். ரஜினி சாருடன் இணைந்து நடிக்கப் போகிற சந்தோஷத்தை எப்படி விவரிப்பதுனு தெரியல." என்றார்.

Rashi Khanna - Dharman
Rashi Khanna - Dharman

ராஷி கண்ணா, "ரஜினி சாருடன் இணைந்து நடிப்பதில் ரொம்பவே மகிழ்ச்சி. அஸ்வத், 'அனைத்து இயக்குநர்களுக்கும் ரஜினி சாரை வைத்து படம் எடுக்கும் ஆசை இருக்கும்' எனச் சொன்னார்.

அனைத்து நடிகர்களுக்கும் அப்படியான ஒரு ஆசை இருக்கும். கமல் சாரின் தயாரிப்பில் நடிப்பது, எனக்கு கிடைத்திருக்கும் மற்றுமொரு பெரிய வாய்ப்பு." எனத் தெரிவித்திருக்கிறார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User