Dada: "அதிலிருந்து பாடம் கற்றுக் கொண்டார்கள்!" - 'தாதா' போஸ்டர் ட்ரால்கள் பற்றி ராஜ்குமார் ராவ்

Oct 09, 2026 - 16:00
0
Dada: "அதிலிருந்து பாடம் கற்றுக் கொண்டார்கள்!" - 'தாதா' போஸ்டர் ட்ரால்கள் பற்றி ராஜ்குமார் ராவ்

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சவுரவ் கங்குலியின் பயோபிக் திரைப்படமான 'தாதா' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியானது.

அந்த போஸ்டரும், அதன் ஏ.ஐ பயன்பாடும் கடுமையான விமர்சனங்களையே சந்தித்திருந்தன. அது குறித்து, இந்த பயோபிக்கில் கங்குலியாக நடிக்கும் ராஜ்குமார் ராவ் பேசியிருக்கிறார்.

Sourav Ganguly at the Lord's

சமீபத்திய பேட்டி ஒன்றில் அவர், "அந்த போஸ்டரை உருவாக்கியவர்கள் விமர்சனங்களில் இருந்து நல்ல பாடத்தைக் கற்றுக்கொண்டார்கள். இந்த மாதிரியான விஷயங்களில் அவசரப்படாமல் நிதானமாக நேரம் எடுத்து வேலை செய்ய வேண்டும் என்பதையும் புரிந்து கொண்டார்கள்.

அதே நேரத்தில், கங்குலி சாருக்கு எந்த அளவுக்கு வெறித்தனமான ரசிகர்கள் இருக்கிறார்கள் என்பதையும் படக்குழுவினர் இதன் மூலம் தெரிந்துகொண்டிருக்கிறார்கள்" என்றவர், "தொழில்நுட்பத்தில் நன்மைகளும் உண்டு, தீமைகளும் உண்டு.

ஏஐ வருவதைத் தடுக்க முடியாது, ஆனால் அதை ஒரு துணைக் கருவியாக மட்டுமே பயன்படுத்த வேண்டும். அதை மட்டுமே முழுமையாகச் சார்ந்திருக்கக் கூடாது.

ஏனென்றால், அதைச் சார்ந்து இருந்தால் லட்சக்கணக்கான மனிதர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். நான்கு சுவருக்குள் உட்கார்ந்து கொண்டு ஏஐ மூலம் எல்லா உணர்ச்சிகளையும் உருவாக்கிவிட முடியாது.

மனித உணர்வுகளுக்கு எப்போதுமே தனி இடம் உண்டு. ஏஐ மூலம் உருவாக்கப்படும் படைப்புகள் போலியானவை என்பதைப் பார்த்தவுடனேயே கண்டுபிடித்துவிடலாம். அது சுவாரஸ்யமாக இருக்காது" எனப் பகிர்ந்திருக்கிறார்.

Dada - Rajkumar Rao
Dada - Rajkumar Rao

தொடர்ந்து பேசியவர் கங்குலியாக நடிப்பது குறித்தும் பகிர்ந்திருக்கிறார். "நான் அவரை பலமுறை நேரில் சந்தித்துப் பேசினேன். கொல்கத்தாவில் உள்ள அவருடைய வீட்டிலும், ஈடன் கார்டன்ஸ் மைதானத்திலும் படப்பிடிப்பு நடத்தினோம்.

கங்குலி, தன் வாழ்க்கை பற்றி வெளியே சொல்லாத பல சுவாரஸ்யமான தகவல்களை எங்களுடன் பகிர்ந்துகொண்டார். இன்றைக்கு இந்திய கிரிக்கெட் அணி அடைந்திருக்கும் மாபெரும் வளர்ச்சிக்கு அடித்தளமிட்டவர் அவர்தான்.

அவருடைய வாழ்க்கையில் வந்த பல கடினமான காலகட்டங்களையும், சரிவுகளையும் அவர் எப்படி எதிர்கொண்டு மீண்டு வந்தார் என்பதையும் இந்தப் படம் பேசும்" எனப் பேசினார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User