`ஜிம்மில் வந்து பார்' - மைனர் வீராங்கனை பாலியல் வன்கொடுமை; துரோணாச்சாரியா விருது பெற்ற கோச் கைது

Aug 24, 2026 - 13:00
0
`ஜிம்மில் வந்து பார்' - மைனர் வீராங்கனை பாலியல் வன்கொடுமை;  துரோணாச்சாரியா விருது பெற்ற கோச் கைது

மும்பை விலே பார்லேயை சேர்ந்த கணேஷ் தேவருக்கர் என்பவர் ஜிம்னாஸ்டிக் விளையாட்டு பயிற்சியாளராக இருக்கிறார். இவர் அங்குள்ள உடற்பயிற்சி மையம் ஒன்றில் இளம் வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு ஜிம்னாஸ்டிக் பயிற்சி கொடுத்து வருகிறார்.

கணேஷிடம் ஜிம்னாஸ்டிக் கற்றுக்கொள்ளும் 16 வயது வீராங்கனையை ஜிம்மிற்கு வரவழைத்து பாலியல் வன்கொடுமை செய்ததாக கணேஷ் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

16 வயது வீராங்கனை படிப்பு காரணமாக சமீப காலமாக பயிற்சிக்கு செல்லாமல் இருந்தார். அவரது மொபைல் போனில் கணேஷ் ஹாய் என்று ஒரு மெசேஜ் அனுப்பினார். இது குறித்து அம்மாணவி தனது தாயாரிடம் தெரிவித்தார்.

`ஃபிரீயாக இருந்தால் வந்து பார்'

மேலும், `எங்கு இருக்கிறாய், ஃபிரீயாக இருந்தால் ஜிம்மில் வந்து என்னை பார்' என்று கணேஷ் பதில் மெசேஜ் அனுப்பினார். பின்னர் 16 வயது வீராங்கனை புறப்பட்டு ஜிம் சென்றார்.

ஜனாதிபதி கையால் விருது பெற்ற கணேஷ்

அங்கு யாரும் இல்லை. கணேஷ் மட்டுமே இருந்தார். மாணவி பயிற்சிக்கு தேவையான ஷுக்களை எடுத்து வந்திருந்தார். வீராங்கனையிடம் காலணிகளை உள்ளே வைக்குமாறு பயிற்சியாளர் அவரிடம் கூறினார்.

அவர் காலணிகளை அறை ஒன்றில் வைக்க செய்யச் சென்றபோது, ​​பயிற்சியாளர் கதவைப் பூட்டிவிட்டு, அவரை வலுக்கட்டாயமாக பாலியல் வன்கொடுமை செய்தார். பின்னர், இது குறித்து யாரிடமும் சொல்ல வேண்டாம் என்று அந்தப் பெண்ணிடம் கூறி அனுப்பி வைத்தார். அப்பெண்ணும் இது குறித்து தனது தாயாரிடம் தெரிவிக்கவில்லை. அவர் நேரடியாக பள்ளிக்கு சென்றார். தான் படிக்கும் பள்ளி ஆசிரியை ஒருவரிடம் இது குறித்து தெரிவித்துள்ளார்.

தோழிகளிடம் கூறி அழுத மாணவி

உடனே ஆசிரியை மூலம் அவரது பெற்றோருக்கும் தகவல் கொடுத்தனர். இது குறித்து உடனே போலீஸில் புகார் செய்யப்பட்டது. போலீஸார் வழக்கு பதிவு செய்து உடனே கணேஷை கைது செய்தனர். மாணவி கொடுத்துள்ள புகாரில், "எனக்கு பயமாக இருந்தது. என் மனம் கலக்கமடைந்திருந்ததால், அந்தச் சம்பவத்தை என் தோழியிடம் கூறினேன். கல்லூரியில் நான் அழத் தொடங்கியபோது எங்கள் ஆசிரியரிடம் தெரிவிக்குமாறு என் தோழிகள் அனைவரும் என்னிடம் கூறினர். எனவே எனது ஆசிரியையிடம் இது குறித்து தெரிவித்தேன் என்று அவர் தனது புகாரில் தெரிவித்தார். கணேஷ் இதற்கு முன்பு விளையாட்டு பயிற்சிக்காக ஜனாதிபதி கையால் துரோணாச்சாரியா விருது பெற்று இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User