CM Vijay: 'முதல்வரின் லண்டன் பயணம்; பரம ரகசியம் காக்கும் தமிழக அரசு!'

Sep 10, 2026 - 14:30
0
CM Vijay: 'முதல்வரின் லண்டன் பயணம்; பரம ரகசியம் காக்கும் தமிழக அரசு!'

தமிழக முதல்வர் விஜய் இன்றிரவு லண்டனுக்கு செல்லவிருக்கிறார். ஆனால், முதல்வர் எதற்காக லண்டன் செல்கிறார்? லண்டனில் அரசு முறையாக முதல்வர் யாரையெல்லாம் சந்திக்கிறார் என எந்தத் தகவலையும் தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.

CM Vijay
CM Vijay

முதல்வர் விஜய் இன்றிரவு லண்டனுக்கு செல்ல திட்டமிட்டிருக்கிறார். சென்னை விமான நிலையத்திலிருந்து இரவு 10:05 மணிக்கு துபாய் கிளம்பும் எமிரேட்ஸ் விமானத்தில் பிஸ்னஸ் வகுப்பில் முதல்வர் விஜய் பயணிக்கிறார். துபாயிலிருந்து கனெக்டிங் ப்ளைட்டில் லண்டன் செல்கிறார்.

செப்டம்பர் 16-ஆம் தேதி வரை முதல்வர் லண்டனில் இருப்பார் எனக் கூறப்படுகிறது. இதற்காக முதல்வரின் பாதுகாப்பு அதிகாரிகள் கடந்த ஞாயிற்றுக் கிழமையே லண்டனுக்கு கிளம்பி சென்றிருக்கின்றனர். நேற்றிரவு அமைச்சர் ஆதவ் அர்ஜூனா லண்டன் கிளம்பி சென்றிருக்கிறார். இன்றிரவு அதிகாரிகளுடன் முதல்வரும் கிளம்புகிறார்.

CM Vijay
CM Vijay

வழக்கமாக முதல்வர்கள் வெளிநாட்டுக்கு சென்றால் அவர்கள் எந்த நாட்டுக்கு யாரை சந்திக்க எதற்காக செல்கிறார்கள் என முழுத் தகவலையும் தமிழக அரசு வெளிப்படையாக அறிவிக்கும். ஆனால், முதல்வர் விஜய் இன்னும் 9 மணி நேரத்தில் வெளிநாடு செல்லவிருக்கிறார். முதல்வர் எதற்காக வெளிநாடு செல்கிறார் என இன்னமும் தமிழக அரசு அறிவிக்கவில்லை. 'வெளிப்படையான நிர்வாகத்தை கொடுப்பேன்' என கர்ஜித்து பதவிப்பிரமாணம் எடுத்துக் கொண்ட முதல்வர் விஜய்யின் ஆட்சியில் அரசுப்பதவி நியமனங்கள் தொடங்கி அரசுமுறைப் பயணம் வரை பல விவகாரங்கள் துளியும் வெளிப்படைத்தன்மையின்றி மறைமுகமாகவே நடக்கிறது என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User