பீகார் : 40 மீட்டர் மொபைல் போன் டவரை தூக்கிச் சென்ற திருடர்கள்! - அதிகாரிகள் அதிர்ச்சி

Jun 13, 2026 - 12:00
0
பீகார் : 40 மீட்டர் மொபைல் போன் டவரை தூக்கிச் சென்ற திருடர்கள்! - அதிகாரிகள் அதிர்ச்சி

பீகாரில் அடிக்கடி வித்தியாசமான திருட்டு நடப்பது வழக்கம். இதற்கு முன்பு ஆற்றின் அமைக்கப்பட்டு இருந்த இரும்பு பாலத்தை கூட இரவோடு இரவாக திருடிச்சென்ற சம்பவங்கள் நடந்து இருக்கிறது. இப்போது மொபைல் போன் டவரை திருடர்கள் அடியோடு எடுத்து சென்றுவிட்டனர். பீகாரில் உள்ள பக்ஸர் மாவட்டத்தில் உள்ள டும்ராவ்ன் நகரத்தில் ஒரு முழு மொபைல் கோபுரம் மாயமாகியுள்ளது. அது முன்பு அமைந்திருந்த இடத்திலிருந்து அது காணாமல் போய்விட்டது. அங்கிருந்த மொபைல் போன் டவர் கடந்த சில ஆண்டுகளாக தொழில் நுட்ப கோளாறு காரணமாக செயல்படாமல் இருந்தது.

இதனால் அதனை சரி செய்வதற்காக அந்த மொபைல் போன் டவரை அமைத்திருந்த ஜி.டி.எல். நிறுவனத்தின் ஊழியர்கள் வந்தனர். ஆனால் அவர்கள் மொபைல் போன் டவர் இருந்த இடத்தை வந்து பார்த்தபோது அங்கு எதுவும் இல்லாமல் இடம் காலியாக இருந்தது.

மொபைல் டவர் மட்டுமல்லாது, ஜெனரேட்டர் மற்றும் தொலைத்தொடர்பு சாதனங்களும் காணாமல் போய் இருந்தது. ஹரிநாத் யாதவ் என்பவருக்குச் சொந்தமான நிலத்தில் அந்த டவர் அமைக்கப்பட்டிருந்தது. ஜி.டி.எல் நிறுவனத்துடனான தனது ஒப்பந்தம் 2022-ல் முடிவடைந்துவிட்டது என்றும், ஆனால் 2017-க்குப் பிறகு தனக்கு எந்தப் வாடகை பணமும் வழங்கப்படவில்லை என்றும் யாதவ் கூறினார்.

ஒப்பந்தம் முடிந்த பிறகு நிறுவனத்திற்குப் பல சட்டப்பூர்வ நோட்டீஸ் அனுப்பியும் எந்தப் பதிலும் கிடைக்கவில்லை என்று அவர் தெரிவித்தார். இருப்பினும், மொபைல் டவர் திருட்டு போனதில் தனக்கு எந்தப் பங்கும் இல்லை என்றும், அந்த டவர் எப்படி மாயமானது என்பது தனக்குத் தெரியாது என்றும் யாதவ் கூறினார். இது குறித்து ஜி.டி.எல் அதிகாரிகள் போலீஸில் புகார் செய்துள்ளனர். அதன் அடிப்படையில் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

டும்ரான் போலீஸ் அதிகாரி போலஸ்ட் குமார் இச்சம்பவத்தை உறுதிப்படுத்தியதுடன், இதற்குப் காரணமானவர்களை கண்டறிய தீவிர விசாரணை நடத்தி வருவதாக தெரிவித்தார். உள்ளூர் மக்கள் இச்சம்பவம் குறித்துத் ஆச்சரியம் அடைந்துள்ளனர். பேட்டரிகள் மற்றும் கேபிள்கள் திருடப்படுவது வழக்கமான ஒன்றுதான் என்றாலும், ஒரு முழு மொபைல் டவரே காணாமல் போனது நன்கு திட்டமிட்டுச் செயல்படும் ஒரு கும்பலின் கைவரிசையாக இருக்கலாம் என்று அவர்கள் தெரிவித்தனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User