8 ஆண்டுகளுக்குப் பிறகு, "வருமான வரி தாக்கல் செய்தீர்களா?" என்று அரசாங்கம் கேட்டால்?| பணம் வளர்ப்போம்

May 21, 2026 - 10:30
0
8 ஆண்டுகளுக்குப் பிறகு, "வருமான வரி தாக்கல் செய்தீர்களா?" என்று அரசாங்கம் கேட்டால்?| பணம் வளர்ப்போம்

வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்வது அவசியம் என்பது கடந்த அத்தியாயத்தில் நமக்குத் தெரிந்திருக்கும்.

ஒருவேளை, வருமான வரிக் கணக்குத் தாக்கல் செய்யாவிட்டால் என்னென்ன நடக்கும் என்பதை விளக்குகிறார் ஆடிட்டர் கிரி பாபு.

"வருமான வரிக் கணக்குத் தாக்கலைப் பொறுத்த வரை, ஒரு இடத்தைக் காலியாக வைத்திருந்தால் அரசே எந்த இடத்தை ஃபில் செய்துகொள்ளும்.

இதனால், என்ன பிரச்னை வரலாம் என்பதை ஒரு உதாரணத்தில் பார்க்கலாம். நீங்கள் சிறுகச் சிறுக உங்கள் வங்கிக் கணக்கில் பணம் சேர்த்து வைத்திருக்கலாம்.

ஆனால், அதை அரசாங்கம் உங்கள் வருமானமாகக் கருதி உங்களுக்கு நோட்டீஸ் அனுப்பலாம்.

அதனால், எதுவாக இருந்தாலும், அதை நீங்கள் ஃபில் செய்துவிடுவது நல்லது.

ஆடிட்டர் கிரி பாபு
ஆடிட்டர் கிரி பாபு

இந்தியாவில் வருமான வரிச் சட்டத்தின் படி, வருமான வரித் துறை உங்களுடைய ஓராண்டு வருமானம் குறித்து 8 ஆண்டுகள் வரை கேட்கலாம். அதாவது, 2026-ம் ஆண்டு வருமானம் குறித்து 2033-ம் ஆண்டு வரை கணக்கு கேட்கலாம்.

எட்டு வருடங்கள் குறித்து உங்களுடைய வருமானத்தைக் குறித்து கேட்கும்போது, உங்களிடம் சரியான ஆவணங்கள் இல்லாமல் போகக்கூடும். அதனால், இப்போதே பக்காவாக வருமான வரிக் கணக்குத் தாக்கல் செய்துவிடுவது நல்லது.

முக்கியமாக, வருமான வரித் துறையே உங்களுடைய வருமானத்தைக் கணக்கில் கொள்ளும் போது, ஃபார்ம் 168-ல் (முன்னால் 26AS, AIS) இருக்கும் அனைத்து தகவல்களையும் எடுத்துக்கொள்ளும். அதனால், மிக மிகக் கவனம் தேவை.

மேலும், உங்களுக்கு வருமான வரி விலக்கு இருந்தாலும், இந்தச் சூழலில், வருமான வரி விலக்கு கிடைக்காது.

அதற்குப் பதிலாக, வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யாததற்கு வரி, அதற்கான வட்டி, அபராதம் என அனைத்தும் உங்கள் தலையில் விழுந்துவிடும்.

வருமான வரி
வருமான வரி

முன்பு, மூன்று நான்கு வருடங்களுக்கு முன்பு வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யவில்லை என்றாலும், இப்போது செய்யலாம். ஆனால், இப்போது அப்படி இல்லை.

அந்தந்த ஆண்டிற்கு அப்போதே வருமான வரிக் கணக்குத் தாக்கல் செய்துவிட வேண்டும்.

ஒருவேளை, வரி ஏதேனும் நீங்கள் கட்ட வேண்டியதாக இருந்தால் மட்டுமே, ஃபைல் செய்ய முடியும். ஆனால், அதற்கும் அபராதம் உண்டு. ஆனால், ரீஃபண்ட் இருந்தாலும், அது கிடைக்காது".

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User