Aadhar-ல் உங்கள் பெயர் 'எப்படி' இடம்பெற வேண்டும்? புதிய நடைமுறைக்கேற்ப பெயர் மாற்றம் செய்வது எப்படி?
2010 காலக்கட்டத்தில் ஆதார் கார்டு நடைமுறைக்கு வந்தபோது, ‘எங்கும்... எதிலும்... அனைத்திலும் ஆதார்’ என்கிற நிலை உருவாகும் என்று யாரும் கற்பனைக்கூடச் செய்து பார்த்திருக்கமாட்டோம்.
அதனால், ஆதார் கார்டு எடுத்ததில் காட்டிய மும்முரத்தை, ஆதார் கார்டில் இடம்பெற்றுள்ள தகவல்களில் உள்ள தவறுகளைத் திருத்தப் பலர் தவறிவிட்டோம்.
இன்னும் பலரிடம் எழுத்துப்பிழை, தரவுப் பிழை உள்ள ஆதார் கார்டு, அப்டேட் செய்யப்படாத ஆதார் கார்டுதான் உள்ளது. இது மிகமிகத் தவறு.
2010 காலக்கட்டம் வேறு... இந்தக் காலக்கட்டம் வேறு. பள்ளி அட்மிஷன், வங்கி தொடங்கி ரயில் டிக்கெட் பதிவு வரை இப்போது அனைத்திற்கும் ஆதார் கட்டாயமாகிவிட்டது.

இதனால், ஆதார் கார்டை அப்-டு-டேட்டாக வைத்திருப்பது நம்முடைய கடமை.
பொதுவாகவே, 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை பெரியவர்கள் தங்களுடைய ஆதார் கார்டை அப்டேட் செய்துவிட வேண்டும். இதற்கு முகத்தோற்ற மாற்றம், முகவரிகள் மாறியிருக்கலாம் போன்றவை காரணங்களாகும்.
அப்டேட் செய்யும்போது, ஆதார் கார்டு தரவுகளில் ஏதேனும் தவறுகள் இருந்தால் உடனே மாற்றம் செய்துவிட வேண்டும்.
‘இப்போது செய்துக்கொள்ளலாம்... அப்போது செய்துக்கொள்ளலாம்’ என்று விட்டுவிட்டால், ஏதேனும் ஒரு இக்கட்டான சூழலில் மாட்டிக்கொள்ளக்கூடும்.
திரும்பத் திரும்பச் சொல்வதுபோலத்தான், இப்போது அனைத்திற்குமே ஆதார் கார்டு மிக முக்கியம் என்றாகிவிட்டது.
ஏதேனும் அத்தியாவசியத் தேவையின் போது, தவறான தரவுகள் உள்ள ஆதார் கார்டு நம்முடைய காலை வாரிவிடலாம். இதனால், இப்போதே உஷாராகிவிடுங்கள்.
ஆதார் கார்டில் உள்ள நமது பெயர் எப்படி இடம்பெற வேண்டும்... அதில் ஏதேனும் எழுத்துப்பிழை இருந்தால், அதை எப்படிச் சரிசெய்ய வேண்டும் என்பதற்கான நடைமுறையைக் கடந்த மாதம் UIDAI வெளியிட்டுள்ளது.

அதன்படி,
> ஆதாரில் இடம்பெற்றுள்ள பெயர் ‘பிளாக்’ எழுத்தில் இடம்பெற வேண்டும். திரு, திருமதி, செல்வி, டாக்டர், பேராசிரியர், கலெக்டர் போன்ற பெயரைத் தவிர எந்தவொரு எக்ஸ்ட்ரா தகவலும் இடம்பெற முடியாது.
> ஆதாரில் பெயர் மாற்றம் ஆதார் (பதிவு மற்றும் புதுப்பித்தல்) ஒழுங்குமுறைகள், 2016-ன் ஒழுங்குமுறை 19 படி மேற்கொள்ளப்படுகிறது. பெயர் மாற்றத்திற்குப் பிரிவு 2-ல் இடம்பெற்றிருக்கும் ஆவணங்களைச் சமர்பிக்க வேண்டும்.
அந்த ஆவணங்களில் எப்படிப் பெயர் இடம்பெற்றிருக்கிறதோ, அப்படித்தான் ஆதார் கார்டிலும் இடம்பெறும். அதாவது, எழுத்துகள், பெயரின் விரிவாக்கங்கள், முதல் பெயர், இடைப்பெயர், இறுதிப்பெயர் என எந்த வரிசையில் அமர்ந்திருக்கிறதோ, அந்த வரிசையில்தான் சமர்பிக்கும் ஆவணங்களை ஒத்துத்தான் ஆதாரில் பெயர் இடம்பெறும்.
> ஆதாரில் சின்ன எழுத்துப்பிழை, இனிஷியல் சுருக்கம், இடைப்பெயர் அல்லது இறுதிப்பெயர் நீக்கம் போன்றவை இருந்தால், அடையாளச் சான்று போதுமானது. 18 வயதுக்குக் குறைவானவர்களுக்கு அடையாளச் சான்றுடன் உறவுச் சான்றும் தேவை.
> உள்ளூர் மொழியில் இடம்பெற்றிருக்கும் பெயரில் மாற்றம் இருந்தால், அது அடையாளச் சான்றின் படி செய்யப்படும்.
திருமணத்திற்குப் பிறகு அல்லது விவாகரத்திற்குப் பிறகு, ஆதாரில் பெயர் மாற்றம் செய்ய வேண்டுமானால், அடையாளச் சான்றுடன் ‘இணைப்பு D’ உள்ள உறுதிமொழிப் பத்திரத்தையும் சமர்ப்பிக்க வேண்டும்.




> பாலின மாற்றத்திற்குப் பிறகான பெயர் மாற்றத்திற்குக் குறிப்பிட்ட அடையாளச் சான்று வழங்க வேண்டும்.
> ஆதாரில் உள்ள பெயரை முழுமையாக மாற்ற வேண்டுமானால், நிலையான அடையாள ஆவணங்களுடன் அரசிதழ் அறிவிப்பும் வேண்டும்.
புதிய நடைமுறையின்படி, ஆதாரில் இரண்டு முறை மட்டுமே பெயர் மாற்றம் செய்ய முடியும். பாலினமும் ஒருமுறைதான் மாற்ற முடியும்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0
Comments (0)