'ஒரு சொல் வெல்லும், ஒரு சொல் கொல்லும்; கரப்பான் பூச்சி என்ற ஒரு சொல் பாஜகவை அலறி..' - பெ.சண்முகம்

May 24, 2026 - 15:31
0
'ஒரு சொல் வெல்லும், ஒரு சொல் கொல்லும்; கரப்பான் பூச்சி என்ற ஒரு சொல் பாஜகவை அலறி..' - பெ.சண்முகம்

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்த் சமீபத்தில் இளைஞர்களைக் கரப்பான்பூச்சி என்று கூறியிருந்தார்.

இதற்கு பெரும் எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில், 'கரப்பான்பூச்சி ஜனதா கட்சி' என்று எக்ஸ் தளத்தில் பக்கம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அந்தப் பக்கத்திற்கு மில்லியன் கணக்கில் ஃபாலோயர்கள் கூடிய நிலையில், தற்போது அந்தப் பக்கம் முடக்கப்பட்டுள்ளது.

இளைஞர்களை கரப்பான்பூச்சி என்று குறிப்பிட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளரான பெ.சண்முகம்...

Cockroach Janata Party
Cockroach Janata Party

"ஒரு சொல் வெல்லும், ஒரு சொல் கொல்லும் என்பார்கள். அதைப்போல "கரப்பான் பூச்சி"என்ற ஒரு சொல் ஒன்றிய பாஜக ஆட்சியாளர்களை அலறித் துடிக்க விட்டிருக்கிறது.

இழிவுபடுத்த கரப்பான் பூச்சி என்று கூறியதையே ஆயுதமாக்கி திருப்பித் தாக்கி இருக்கிறார்கள் இளைஞர்கள், ஆட்சியாளர்களுக்கு எதிர்ப்பை இப்படியும் வெளிப்படுத்தலாம்" என்று கூறியுள்ளார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User