`ஓர் அன்பான அழைப்பு!' திருச்சியில் பசுமை விகடன் நடத்தும் மாபெரும் வேளாண் கண்காட்சி - 2026

Oct 23, 2026 - 20:30
0
`ஓர் அன்பான அழைப்பு!' திருச்சியில் பசுமை விகடன் நடத்தும் மாபெரும் வேளாண் கண்காட்சி - 2026
விவசாயிகளுக்கும், வேளாண் தொழில் நிறுவனங்களுக்கும் ஓர் அன்பான அழைப்பு… சத்யம் அக்ரோ கிளினிக் வழங்கும் பசுமை விகடன் அக்ரி எக்ஸ்போ-2026, திருச்சியில் மிக பிரமாண்டமாக நடைபெறவுள்ளது.

கடந்த ஆண்டுகளில் திருச்சி மற்றும் ஈரோட்டில் நடத்தப்பட்ட பசுமை விகடன் அக்ரி எக்ஸ்போவுக்கு கிடைத்த மக்களின் அமோக ஆதரவின் விளைவாகவும், பசுமை விகடன் வாசக விவசாயிகளின் அன்பான வேண்டுகோளுங்கு இணங்கவும் 8-வது முறையாக இந்த வேளாண் கண்காட்சி திருச்சியில் நடத்தப்படுகிறது.

 ’மாற்றம் ஒன்றே’ மாறாதது. விவசாயம் மற்றும் உணவுச் சார்ந்த தொழில்களுக்கும் இந்தப் பொன்மொழி பொருந்தும்... நாளுக்கு நாள் புத்தம் புதிய தொழில்நுட்பங்களும் கருவிகளும் அறிமுகமாகிக் கொண்டே இருக்கின்றன. பயிர் சாகுபடி, கால்நடை வளர்ப்பு, உணவு மதிப்புக்கூட்டல் ஆகியவற்றில் வேலைகளை எளிதாக்கவும் செலவுகளை சிக்கனப்படுத்துவதற்கும் அதிநவீன தொழில்நுப்டங்கள் மற்றும் கருவிகள் பயன்படுகின்றன. இவற்றை பசுமை விகடன் வாசக விவசாயிகள், இல்லத்தரசிகள், தொழில்முனைவோர்கள் உள்ளிட்டவர்களுக்கு அறிமுகம் செய்வதை கடமையாகவும் பொறுப்பாகவும் கருதுகிறது பசுமை விகடன்.

திருச்சியில் டிசம்பர் 18,19,20

டிசம்பர் 18,19,20 ஆகிய மூன்று நாள்கள், திருச்சி கலையரங்கத்தில் நடைபெறவுள்ள இக்கண்காட்சியில் உழவு, விதைப்பு, களைக்கட்டுப்பாடு, கவாத்து, நீர்பாசனம், அறுவடை ஆகியவற்றுக்குத் தேவையான அதிநவீன இயந்திரங்கள், இயற்கை இடுபொருள்கள், விதைகள், கன்றுகள், மாடித்தோட்ட உபகரணங்கள், மதிப்புக்கூட்டலுக்குத் தேவையான கருவிகள், இயற்கை வேளாண் விளைபொருள்கள், மதிப்புக்கூட்டப்பட்ட உணவுப் பொருள்கள் உள்ளிட்ட சகலவிதமான அம்சங்களும் இடம்பெறுகின்றன. இக்கண்காட்சியில் வேளாண்மை மற்றும் உணவுத் துறைச் சார்ந்த பல்வேறு அரசு நிறுவனங்களும் பங்கு பெறுகின்றன. 

இக்கண்காட்சியின் முக்கிய அங்கமாக விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோர்கள் பயன்பெறும் வகையில் மூன்று நாள்களும் கருத்தரங்கம் நடைபெறுகிறது. வேளாண் விளைப் பொருள்களுக்கான ஏற்றுமதி வாய்ப்புகள் மற்றும் வழிமுறைகள், மரம் வளர்ப்பு மூலம் அதிக லாபம் சம்பாதித்தல், ஒருங்கிணைந்த பண்ணையம், கால்நடை மூலிகை வைத்தியம், இயற்கை வேளாண்மையில் குறைந்த செலவில் அதிக பலன்கள் தரும் வெளிநாட்டு தொழில்நுட்பங்கள், நாட்டுக்கோழி வளர்ப்பு, காளான் வளர்ப்பு, வறட்சியிலும் வளமாக வளரும் சப்பாத்திக்கள்ளி, உபரி வருமானம் தரும் வேளாண் சுற்றுலா, காடை வளர்ப்பு, முருங்கை மதிப்புக்கூட்டல், மேட்டுப்பாத்தியில் 5 வகையான கீரை சாகுபடி, உத்தரவாதமான லாபம் தரும் உணவுக்காடு, தென்னை மதிப்புக்கூட்டல்,  காகிதக்கூழ் மரங்கள் மூலம் குறுகிய காலத்தில் கணிசமான லாபம் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் அனுபவ விவசாயிகள் மற்றும் வேளாண் வல்லுநர்கள் உரையாற்றுகிறார்கள்.

எனவே, விவசாயிகள், இல்லத்தரசிகள், தொழில்முனைவோர்கள், வேளாண் கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட பலரும் இந்த மாபெரும் வேளாண் கண்காட்சியில் பங்கு பெற்று பலன் பெறுமாறு அன்புடன் அழைக்கிறது, உங்கள் பசுமை விகடன்!

ஸ்டால் புக்கிங் மற்றும் பிற விவரங்களுக்கு:-

தொடர்பு எண்: 9003651552, 9150807297

மிக பிரமாண்டமான வேளாண் கண்காட்சி

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User