4 வயதுக் குட்டிப் பையன் விஜய்! - 48 ஆண்டுகளுக்கு முன் நடந்த அந்த அதிசய சந்திப்பு

Jun 08, 2026 - 15:31
0
4 வயதுக் குட்டிப் பையன் விஜய்! -  48 ஆண்டுகளுக்கு முன் நடந்த அந்த அதிசய சந்திப்பு

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர்

அது 1978 வருடம். நான் ராஜலக்ஷ்மி . அப்போது எனக்கு 19 வயது.

சென்னையில், தரமணியில் உள்ள அரசினர் மகளிர் பாலிடெக்னிக்கில் electronics கடைசி வருடம் படித்துக் கொண்டிருந்தேன்.

கல்லூரி ஆண்டு விழா கொண்டாட்டங்கள் தொடங்கி விட்டன.

மே மாதம். தேதி நினைவு இல்லை.

நகரத்தில் உள்ள புகழ் பெற்ற இன்னிசை குழுவை எங்கள் கல்லூரியில் பாட அழைத்திருந்தோம்.

லலிதாஞ்சலி இசைக் குழு என்பது அதன் பெயர்.

நான்கு சகோதர சகோதரிகள்.

ஷோபா, ஷீலா, சுந்தர், சுரேந்தர் என்கிற நால்வர். ஷோபாதான் நம் விஜய் அவர்களின் அன்னை. சுரேந்தர் mohan என்ற நடிகருக்கு நிறைய படங்களில் குரல் தந்தவர். விஜயின் தாய் மாமா.

நால்வரும் அருமையாக பாடினார்கள்.

நான்கு வயது குட்டி பையன் விஜயும் வந்து இருந்தார்.

வெளியில் உள்ள வராண்டாவில் அவர் அப்பா சந்திரசேகர் விஜய்யை தூக்கிக் கொண்டு நடந்து கொண்டு இருப்பார்.

விஜய் வெகு அழகாக துரு துரு என்று இருப்பார்.

கல்லூரி பெண்களுக்கே உரிய ஆசையில் நாங்கள் மாற்றி மாற்றி குட்டி பையனை தூக்கி வைத்து கொண்டாடினோம்.

இப்போது நினைத்தாலும் அந்த நினைவு பசுமையாக இருக்கு. இப்போது எனக்கு வயது 67.

இவர் பிற்காலத்தில் தமிழக முதல் அமைச்சர் ஆக வருவார் என்று தெரிந்து இருந்தால் ஒரு புகைப்படம் எடுத்திருக்கலாம்.

செல் போன் வசதி இல்லாத காலம்.

இப்போது அவர் படம் முதல் நாளே பார்த்து விடுவோம் நானும் என் கணவரும். அவருக்கும் விஜய் ரொம்ப பிடிக்கும்.

விஜய் அரசியலுக்கு வந்ததும் பெரு மகிழ்சி அடைந்தோம்.

நானும் விசில் சின்னத்துக்கு ஓட்டு போட்டேன்.

பார்க்கிற அனைவரையும் விசில் சின்னத்துக்குதான் போட சொன்னேன்.

விஜய் பல்லாண்டு வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

முடிந்தால் அவரை மறுபடி சந்திக்க ஆவலாய் உள்ளேன்.

ராஜலக்ஷ்மி R

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User