"முட்டாள்தனமான 3 திருமணங்கள்; 17 ஆண்டுகளை வீணடித்துவிட்டேன்" - நடிகை மீரா வாசுதேவன் வருத்தம்!
நடிகை மீரா வாசுதேவன் சமீபத்திய பேட்டி ஒன்றில் தனது திருமண வாழ்க்கை குறித்து வெளிப்படையாகப் பேசியிருக்கிறார்.
பிரபல மலையாள நடிகையான மீரா வாசுதேவன் 'உன்னைச் சரணடைந்தேன்' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர். 'ஜெர்ரி', 'ஆட்ட நாயகன்', 'அடங்க மறு' உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார்.
இந்தி, தெலுங்கு மொழி படங்களில் நடித்து வரும் இவர் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து வருகிறார்.

நடிகை மீரா வாசுதேவன் கடந்த 2005-ம் ஆண்டு ஒளிப்பதிவாளர் அசோக் குமாரின் மகன் விஷால் அகர்வாலைத் திருமணம் செய்தார்.
கருத்து வேறுபாடு காரணமாக 2010-ல் விவாகரத்து பெற்ற அவர், பின்னர் 2012-ல் நடிகர் ஜான் கொக்கனை மணந்தார்.
இவர்களுக்கு அரிஹா ஜான் என்ற மகன் உள்ளார். 2016-ல் இவர்களது உறவும் முடிவுக்கு வந்த நிலையில், கடந்த ஆண்டு ஒளிப்பதிவாளர் விபினைத் திருமணம் செய்தார்.
ஆனால், குறுகிய காலத்திலேயே அந்த உறவிலிருந்தும் பிரிவதாக மீரா அறிவித்தார். தனது மூன்று திருமணங்களுமே கசப்பான அனுபவங்களைக் கொடுத்த நிலையில் இதுதொடர்பாக பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார்.
“நான் என் மகனிடம் அடிக்கடி சொல்வேன்...மூன்று முட்டாள்தனமான திருமணங்களால் என் வாழ்க்கையின் 17 ஆண்டுகளை வீணடித்துவிட்டேன். அந்த நேரத்தில் புத்திசாலித்தனமாக வேலை செய்திருந்தால் நான் இன்னும் பல சாதனைகள் செய்திருக்கலாம்.

சினிமா, உடற்பயிற்சி அல்லது எனக்காக ஒரு சிறந்த சமூக வட்டத்தை உருவாக்குவது போன்ற நான் விரும்பும் விஷயங்களில் கவனம் செலுத்தியிருக்கலாம்.
என் வாழ்க்கையில் நான் இன்னும் எவ்வளவோ சாதித்திருக்க முடியும், ஆனால் என்னால் முடியவில்லை. என் தந்தை, தாய் மற்றும் சகோதரியுடன் நான் நிறைய நேரத்தைச் செலவிட்டிருக்கலாம்.
அதற்குப் பதிலாக, அந்த நேரத்தை மற்றவர்களுக்காக வீணடித்துவிட்டேன். என்னை ஒருபோதும் மதிக்காத அல்லது என்னைப் பொருட்டாகவே நினைக்காத மனிதர்களுடனான உறவுகளுக்காக, நான் மிக அதிகமான நேரத்தை வீணாக்கிவிட்டேன்" என்று கூறியிருக்கிறார்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0
Comments (0)