'வெள்ளை சீருடை போலீஸ்; ஒரு நாளுக்கு 100 ரூபாய் படி.!' - யார் இந்த அவைக்காவலர்கள்?

Sep 08, 2026 - 12:32
0
'வெள்ளை சீருடை போலீஸ்; ஒரு நாளுக்கு 100 ரூபாய் படி.!' - யார் இந்த அவைக்காவலர்கள்?

திமுக உறுப்பினர்கள் சபாநாயகரின் இருக்கையை சூழ்ந்து கோஷம் போட்டதால் அவைக்காவலர்களால் குண்டுக்கட்டாக வெளியேற்றப்பட்டிருக்கின்றனர்.

இந்த அவைக்காவலர்கள் என்பவர்கள் யார்?

அவைக் காவலர்கள்
அவைக் காவலர்கள்

அவை எப்போதுமே சுமூகமாக நடக்காது. அவைக்குள் கடும் அமளி நடக்கும் சூழலில் அதை கட்டுப்படுத்த அவைக்குள் நுழையும் காவலர்கள்தான் அவைக் காவலர்கள். சபாநாயகர் அவைக்காவலர்களை அழைத்தால் மட்டுமே அவர்கள் அவைக்குள் நுழைய முடியும்.

சபாநாயகர் யாரை எந்தக் கட்சியினரை குறிப்பிடுகிறாரோ அந்தக் கட்சியினரை அவர்களை இந்த அவைக் காவலர்கள் குண்டுக்கட்டாகக் கூட வெளியேற்றி, அவை தொடர்ந்து சுமூகமாக நடப்பதை உறுதி செய்வர்.

தலைமைச் செயலகத்தின் மற்ற ஊழியர்களைப் போல இவர்கள் தலைமைச் செயலகத்தில் பணியாற்றக் கூடியவர்கள் அல்ல. இவர்களும் காவல்துறையை சேர்ந்தவர்களே. சட்டமன்றம் நடைபெறாத காலக்கட்டங்களில் காக்கி உடையில் வழக்கமான காவல் பணியில் இருப்பார்கள்.

அவைக் காவலர்கள்
அவைக் காவலர்கள்

அவை கூடும்போது சிறப்புப் பணியாக வெள்ளை உடையோடு அவைக் காவலர்களாக வருவார்கள். தமிழக சட்டமன்றத்தில் இப்போது 150 அவைக் காவலர்கள் பணியில் இருக்கின்றனர். இவர்கள் எல்லாருமே சென்னையின் வெவ்வேறு காவல்நிலையங்களில் பணியாற்றக் கூடியவர்கள். அவை நடக்கும் போது ஒவ்வொரு லிமிட்டில் இருந்தும் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான காவலர்கள் அவைக்காவலர்களாக சிறப்புப் பணிக்கு வருவார்கள். இந்த அவைக்காவலர் பணியை செய்வதற்காக இவர்களுக்கு ஒரு நாளைக்கு 100 ரூபாய் படியாக வழங்கப்படும். இன்றோடு இந்தக் கூட்டத்தொடர் முடிகிறது. அதனால் நாளை முதல் இவர்கள் வெள்ளை உடையை விட்டு வழக்கமான காக்கி உடையில் பணிக்கு சென்றுவிடுவார்கள்.!

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User