`பலரும் விமர்சனம் செய்த என் செய்தி வாசிப்புதான் முதல்வர் முன் நிற்க வைத்தது!' - 'பாலிமர்' ரஞ்சித்
'பார்ப்பதற்கு அப்பாவி போலிருக்கும் இவர்தான்..'
- டிவியில் இந்த வார்தைகளைக் கேட்டாலே இப்போதெல்லாம் எந்த வேலையிலிருந்தாலும் ஒரு நிமிடம் டிவி முன் ஓடி வந்து விடுகின்றனர் பலரும். இந்த வார்த்தைகளுக்குச் சொந்தக்காரர் ரஞ்சித்.
கடந்த வாரம் தமிழக முதல்வர் விஜய் கலந்து கொண்ட குடிநீர் திட்ட அடிக்கல் நாட்டு விழாவைத் தொகுத்து வழங்கிய ரஞ்சித், அரசு நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கியது இது இரண்டாவது முறை என்கிறார்.
முதன்முதலாக கடந்த ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தின விழா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
''பள்ளிக்கூடத்துல படிக்கிறப்ப அசெம்ப்ளியில செய்தி வாசிக்கறதுல ஆரம்பிச்சது செய்திக்கும் எனக்குமான தொடர்பு. உடனெ ஃபர்ஸ்ட் ரேங்க் வாங்குற பையன்னு நினைச்சுடாதீங்க. செய்தி வாசிச்ச அளவுக்கு புத்தகத்தை வாசிச்சது கிடையாது. அதனால் பிளஸ் டூவுல ஒரு பாடத்துல ஃபெயில். இதுக்கு மேல அந்தக் கதைக்குள் போக வேண்டாம்னு நினைக்கிறேன்.
படிச்சு முடிச்சதும் பல இடங்கள்ல வேலை பாத்திருக்கேன். ஆனாலும் டிவி அதுலயும் செய்தி மேல ஒரு கண் இருந்துட்டே இருந்தது. சன் டிவியில ஆடிஷன்னு தெரிஞ்ச ஒருத்தர் சொல்லி போனேன். வாய்ஸ் ஓவர் ஆர்ட்டிஸ்ட்டா செலக்ட் பண்ணினாங்க.
பொதுவா எனக்கு ஒரு பழக்கம் இருக்கு. எந்தவொரு நிகழ்ச்சி எங்க நடந்தாலும் போயிடுவேன். தொடர்புகளை வளர்க்கணும்கிறதுல பெரிய ஆர்வம். அந்த தொடர்புகளே அடுத்தடுத்த வாய்ப்புகளை உருவாக்குச்சு. சன் டிவியில இருந்து பாலிமர் டிவிக்கு வந்தேன்.

அங்க எனக்கு கிடைச்ச சுதந்திரம் ரொம்ப பெரிசு. பொதுவா சேனல்கள்ல செய்தி வாசிப்பு ஃப்ளாட்டா வாசிச்சா போதும்னுதான் நினைப்பாங்க. அந்த மீட்டரைத் தாண்டி ஏத்தியோ இறக்கியோ வாசிக்க முடியாது. ஆனா எனக்கு அந்தக் கட்டுப்பாடு இல்லை. நான் சில மாடுலேஷன்கள்ல வாசிச்சப்ப 'வித்தியாசமா இருக்கே'னு அதை அனுமதிச்சாங்க.
இன்னைக்கு நீங்க பாக்குற செய்தித் தொகுப்புகள் அப்படி ஆரம்பிச்சதுதான். ஒருகட்டத்துல அந்த செய்திகள் நல்ல வரவேற்பைப் பெறவே, அதையே ஃபாலோ செய்யச் சொல்லிட்டாங்க" என்றவரிடம்,
`செய்தின்னா ஒரு சீரியஸ் இருக்க வேண்டாமா, உங்க செய்தி வாசிப்பு சமயங்கள்ள ட்ரோல் ஆகுதே' என்ற கேள்வியை வைத்தோம்.
''சீரியஸ் செய்தின்னா ஓ.கே. அதை வாசிக்கிறப்ப அதுக்கு ஏத்த மாதிரி மாடுலேஷன்லதான் இருக்கும். அதுல கவனமா இருப்போம். அதேநேரம் சில செய்தியே கொஞ்சம் ஃபன்னா இருக்குமில்லையா, அந்த மாதிரியான செய்திகளை வாசிக்கிறப்பதான் இன்ட்ரஸ்ட்டைக் கூட்டி கூடுதலா கொஞ்சம் ஃபன் டோன் சேர்க்கறோம்.
அந்த மாதிரியான செய்திகளை ட்ரோல் மெட்டீரியல் ஆக்கிடுறாங்க சிலர். ஆனாலும் செய்தி ரீச் ஆகிடுதில்லையா... அது போதும்ல எங்களுக்கு.

ஆனா இந்த துறையில முன்னோடியா இருந்த சில செய்தி வாசிப்பாளர்கள் நான் செய்தி வாசிக்கும் முறையை விமர்சனமும் செய்தார்கள். 'இதெல்லாம் நல்லாவா இருக்கு' என்பதுதான் அவர்களுடைய கருத்து.
ஆனா செய்தி போக வேண்டியவங்களுக்குப் போய்ச் சேர்ந்தா போதும்கிறதுதான் என்னுடைய நோக்கம்'' என்றவர், அரசு நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கியது குறித்து,
``பொதுவா தொகுப்பாளர்களுக்குத்தான் நிகழ்ச்சி தொகுத்து வழங்குகிற வாய்ப்புகள் அமையும். நான் செய்தி வாசிப்பாளர். ஆனா என்னுடைய செய்தி வாசிப்புதான் அரிய இந்த வாய்ப்புகளை வாங்கித் தந்ததுனு உரக்கச் சொல்வேன்.
முதலமைச்சர் கலந்து கொள்கிற மேடையில பங்கேற்கிற வாய்ப்புங்கிறது சாதாரணமில்லை. நம்பிக்கை வச்சு கூப்பிட்டாங்க. முழு உழைப்பைப் போட்டேன். நிகழ்ச்சி முடிஞ்சதும் அதுக்கான பாராட்டும் கிடைச்சது" என்கிறார்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0
Comments (0)