பஞ்சாப்: வேட்பாளர் பட்டியலால் அதிருப்தி; ஆம் ஆத்மியிலிருந்து விலகியவுடன் பாஜகவில் இணைந்த 3 MLAக்கள்!

Nov 02, 2026 - 15:30
0
பஞ்சாப்: வேட்பாளர் பட்டியலால் அதிருப்தி; ஆம் ஆத்மியிலிருந்து விலகியவுடன் பாஜகவில் இணைந்த 3 MLAக்கள்!

பஞ்சாப் மாநிலத்திற்கு அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடக்க இருக்கிறது. தற்போது அம்மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடந்து வருகிறது. இத்தேர்தலுக்காக 40 பேர் கொண்ட முதல் வேட்பாளர் பட்டியலை ஆம் ஆத்மி கட்சி இரண்டு நாட்களுக்கு முன்பு வெளியிட்டது.

இந்தப் பட்டியல் கட்சி நிர்வாகிகள் இடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது. இதையடுத்து நேற்று ஆம் ஆத்மி கட்சியில் இருந்து விலகுவதாக இரண்டு எம்.எல்.ஏ.க்கள் அறிவித்தனர். ஆம் ஆத்மி அரசு பஞ்சாப் போதைப்பொருள் பழக்கம், மாநிலத்தின் கடன் பிரச்னைக்குத் தீர்வு காண தவறிவிட்டதாக இரண்டு பேரும் குற்றம் சாட்டி இருந்தனர்.

இன்று காலை முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரியான எம்.எல்.ஏ விஜய் பிரதாப் சிங் ஆம் ஆத்மி கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தனர். இதையடுத்து அவர்கள் மூன்று பேரையும் ஆம் ஆத்மி கட்சி கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்வதாக அறிவித்து இருக்கிறது.

இந்நிலையில் இன்று அமிர்தசரஸ் வடக்கு தொகுதி எம்எல்ஏ குன்வர் விஜய் பிரதாப் சிங், ஏற்கனவே ஆம் ஆத்மி கட்சியில் இருந்து விலகிய சமனாவைச் சேர்ந்த சேத்தன் சிங் ஜூரமஜ்ரா, பாட்டியாலா மாவட்டத்தில் உள்ள சனூரில் இருந்து ஹர்மீத் சிங் பதான்மஜ்ரா ஆகியோர் டெல்லியில் உள்ள பா.ஜ.க அலுவலகத்திற்குச் சென்று தங்களை முறைப்படி பா.ஜ.கவில் இணைத்துக்கொண்டனர்.

அவர்கள் பா.ஜ.க-வில் இணைந்தது ஆம் ஆத்மி கட்சிக்குப் பெரிய பின்னடைவாகக் கருதப்படுகிறது. மூன்று பேரின் பதவியைப் பறிக்கும்படி சபாநாயகருக்குப் பரிந்துரைக்கப்படும் என்று ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது.

இது குறித்து அக்கட்சியின் செய்தித்தொடர்பாளர் குல்தீப் சிங் கூறுகையில்,''பா.ஜ.க ஒரு பழைய இரும்புக்கடை. நிராகரிக்கப்படும் தலைவர்களைத் தங்களது கட்சியில் சேர்த்துக்கொண்டிருக்கிறது''என்று தெரிவித்தார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User