நாதக கார்த்திகா கைது: "நயினாருக்கு எதிராகக் கைது நடவடிக்கை எடுத்தார்களா?" - கனிமொழி கேள்வி

Oct 21, 2026 - 14:01
0
நாதக கார்த்திகா கைது: "நயினாருக்கு எதிராகக் கைது நடவடிக்கை எடுத்தார்களா?" - கனிமொழி கேள்வி

திமுக எம்.பி கனிமொழி செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார். அப்போது நாதக வேட்பாளர் கார்த்திகா கைது குறித்து பேசிய கனிமொழி, "வேண்டுமென்றே கால்புணர்ச்சியில் செய்திருக்கக்கூடிய அத்துமீறல்தான் இந்தக் கைது.

அப்படி என்ன அவசரம்? இடைத்தேர்தலில் பதியப்பட்ட வழக்கிற்காக காலையில் 5 மணிக்குச் சென்று அவரையும், அவரது கணவரையும் கைது செய்திருக்கிறார்கள்.

கார்த்திகா
கார்த்திகா

குறிப்பாக கார்த்திகாவிற்கு உடை மாற்றக்கூட அனுமதி கொடுக்காமல் கைது செய்ய வேண்டிய சூழல் என்ன இருக்கிறது. தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் பெண்களுக்கு எதிராக வன்முறையை நிகழ்த்தி கொண்டுதான் இருக்கிறார்கள்.

மேயர் பிரியா, திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சி பெண்கள் குறித்து மிகக் கேவலமாக சமூக வலைத்தளங்களில் பல மோசமான பதிவுகளைத் தொடர்ந்து முன்வைத்து வருகிறார்கள். நாங்களும் நிறைய முறை புகார் அளித்துவிட்டோம். அதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

மேயர் பிரியா
மேயர் பிரியா

ஆனால் முதலமைச்சரின் மனம் கோணும்படி எது நடந்தாலும் கைது செய்யப்படுகிறார்கள். பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தனிப்பட்ட முறையில் பேசியிருக்கிறார் அவருக்கு எதிராக கைது நடவடிக்கை எடுத்தார்களா? ஆக கார்த்திகாவின் கைது என்பது பழிவாங்கும் நடவடிக்கைதான்" என்று பேசியிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/2b963ppb

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User