சிகரெட் பிடித்ததால் ஏற்பட்ட தகராறு; டிரைவரை அடித்து கொன்ற கிளீனர்; மதுரையில் பரபரப்பு

Oct 14, 2026 - 11:30
0
சிகரெட் பிடித்ததால் ஏற்பட்ட தகராறு; டிரைவரை அடித்து கொன்ற கிளீனர்; மதுரையில் பரபரப்பு

மதுரை மாவட்டம் ஒத்தக்கடை அருகேயுள்ள திருமோகூரைச் சேர்ந்த பார்த்திபன் என்ற பாட்ஷா (30). இவர் ராஜாக்கூரில் உள்ள தண்ணீர் நிறுவனத்தில் டிரைவராகப் பணிபுரிந்துவருகிறார்

அதே நிறுவனத்தில், ஒத்தக்கடை அருகேயுள்ள ஓடைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த வெற்றிவேல் (19) என்ற இளைஞர் கிளீனராகப் பணியாற்றிவந்துள்ளார்..

இந்நிலையில், பணி முடிந்ததும் இருவரும் நிறுவனத்தின் அருகே அமர்ந்து மது அருந்தியுள்ளனர். அப்போது கிளீனர் வெற்றிவேல் புகைப்பிடித்ததாகக் கூறப்படுகிறது

இதைப் பார்த்த ஓட்டுநர் பார்த்திபன், தன் முன்னிலையில் புகைப்பிடிப்பதா? எனக் கேட்டுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது அருகில் கிடந்த இரும்புக் கம்பியை எடுத்து வெற்றிவேலை பார்த்திபன் அடித்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த கிளீனர் வெற்றிவேல் ஓட்டுநர் பார்த்திபனிடம் இருந்த இரும்புக் கம்பியைப் பறித்து பார்த்திபனின் தலையில் தாக்கியுள்ளார்.

பார்த்திபன்

இதில் பலத்த காயமடைந்த பார்த்திபன் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்துள்ளார். இதையடுத்து வெற்றிவேல் அங்கிருந்து தப்பியோடிய நிலையில் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஒத்தக்கடை காவல்துறையினர் பார்த்திபனை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், பார்த்திபன் வரும் வழியிலயே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனர்.

இதையடுத்து, ஒத்தக்கடை காவல்துறையினர் ஓட்டுனர் பார்த்திபனைக் கொலை செய்ததாக கிளீனர் வெற்றி வேல் மீது கொலை வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.

மதுரையில் சிகரெட் புகையால் ஏற்பட்ட தகராறில் கிளீனரே ஓட்டுநரைப் படுகொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User