காதலனுடன் தனிமையில் இருந்தபோது அழுத 8 மாத குழந்தை கொலை; 3 ஆண்டுகளுக்குப் பின் தாய் சிக்கியது எப்படி?

Oct 22, 2026 - 11:31
0
காதலனுடன் தனிமையில் இருந்தபோது அழுத 8 மாத குழந்தை கொலை; 3 ஆண்டுகளுக்குப் பின் தாய் சிக்கியது எப்படி?

கேரள மாநிலம் திருவல்லா புளிக்கிழ் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சதுப்புநிலப் பகுதியில் 8 மாதமே ஆன பெண் குழந்தையின் சடலம் 2023-ம் ஆண்டு ஆகஸ்ட் 12-ம் தேதி மீட்கப்பட்டது.

இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். ஆனால், குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க முடியாமல் போலீஸார் திணறினர். இந்நிலையில், பாலக்காட்டைச் சேர்ந்த மஞ்சு (45) என்பவருக்கும் அவரது காதலன் சிவா என்பவருக்கும் இடையே சில நாட்களுக்கு முன் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

அப்போது ஆத்திரத்தில் இருவரும் குழந்தையின் கொலை தொடர்பாக ஒருவரையொருவர் மாறி மாறி குற்றம்சாட்டி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். ​இவர்களது வாக்குவாதத்தைக் கேட்ட அப்பகுதி பொதுமக்கள், உடனடியாக அப்பகுதியின் சமூக நல ஒருங்கிணைப்பாளருக்குத் தகவல் தெரிவித்தனர்.

அவர் அளித்த தகவலின் பேரில் போலீஸார் மஞ்சுவைப் பிடித்து கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். விசாரணையில் குழந்தையை மூச்சுத்திணறடித்துக் கொன்றதாக மஞ்சு தெரிவித்திருக்கிறார்.

குழந்தை கொலை
குழந்தை கொலை ( சித்தரிக்கப்பட்ட படம்)

இதுகுறித்து போலீஸாரிடம் மஞ்சு அளித்துள்ள வாக்குமூலத்தில், "2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 8 அன்று இரவு சங்கனாச்சேரி கே.எஸ்.ஆர்.டி.சி பேருந்து நிலையத்தின் கடைத்திண்ணையில் நானும் என் காதலன் சிவாவும் தனிமையில் நெருக்கமாக இருந்தோம். அப்போது குழந்தை தொடர்ந்து அழுதுகொண்டே இருந்தது.

இதனால் ஆத்திரமடைந்த சிவா, குழந்தையின் வாய் மற்றும் மூக்கை அழுத்தி மூச்சுத்திணறடித்துக் கொடூரமாகக் கொலை செய்தார். ​பின்னர், நள்ளிரவு நேரத்தில் சிவாவும் அவரது சகோதரர் சக்தியும் சேர்ந்து, குழந்தையின் உடலை பைக்கில் எடுத்துச் சென்று சுமார் 13 கிலோமீட்டர் தொலைவில் உள்ள புளிக்கிழ் சதுப்பு நிலத்தில் வீசினர்" எனக் கூறியுள்ளார்.

கைதுசெய்யப்பட்ட மஞ்சு
கைதுசெய்யப்பட்ட மஞ்சு

இக்கொலை வழக்கில் மஞ்சுவைக் கைது செய்த போலீஸார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். ​இக்கொலையில் நேரடியாகத் தொடர்புடைய அவரது காதலன் சிவா, உடலை மறைக்க உதவிய அவரது சகோதரர் சக்தி ஆகிய இருவரும் தற்போது தலைமறைவாக உள்ளனர். இருவரையும் கைது செய்ய போலீஸார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User