'ஆடையின்றி கவர்ச்சி விளம்பரம்' - சிட்னி ஸ்வீனிக்கு எதிராக ஒன்று கூடும் விளையாட்டு வீராங்கனைகள்!

Sep 15, 2026 - 15:00
0
'ஆடையின்றி கவர்ச்சி விளம்பரம்' - சிட்னி ஸ்வீனிக்கு எதிராக ஒன்று கூடும் விளையாட்டு வீராங்கனைகள்!

பிரபல ஹாலிவுட் நடிகையான சிட்னி ஸ்வீனி 'நோவிக்' என்கிற ஸ்போர்ட்ஸ் சார்ந்த நிறுவனம் ஒன்றின் விளம்பரத்தில் ஆடைகளின்றி விளையாட்டு வீராங்கனை பாத்திரத்தில் கவர்ச்சியாக நடித்திருக்கிறார். சமூகவலைதளங்களில் இந்த விளம்பரம் வைரலாகவே பல்வேறு விளையாட்டுகளை சேர்ந்த வீராங்கனைகள், 'விளையாட்டு வீராங்கனைகளை கவர்ச்சிப் பொருளாகத்தான் அடையாளப்படுத்துவீர்களா?' என கொந்தளித்து வருகின்றனர்.

Sydney Sweeny
Sydney Sweeny

இரண்டு நாட்களுக்கு முன்பு நோவிக் என்ற பிராண்டுக்காக விளையாட்டு போட்டிகளை மையப்படுத்தி ஆடைகளின்றி நடித்திருந்த ஒரு விளம்பரப் படத்தையும் அதன் ஸ்டில்களையும் சிட்னி ஸ்வீனி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். இந்தப் படங்களுக்கு வழக்கம் போல எக்கச்சக்கமான லைக்ஸூகளும் ஷேர்களும் குவிந்து வைரலானது. அந்த விளம்பரப் படத்தில் விளையாட்டு வீராங்கனையாக சித்தரிக்கப்பட்டிருக்கும் விதம்தான் இப்போது சர்ச்சையாகியிருக்கிறது.

ஒலிம்பிக்ஸ் நீச்சலில் நான்கு முறை தங்கம் வென்ற ஆரியானி டிட்மஸ், 'அந்தப் புகைப்படத்தை இங்கே பகிர்ந்து அதற்கு இன்னமும் விளம்பரம் தேடி கொடுக்க நான் விரும்பவில்லை. இப்போது எவ்வளவு கோபமாக இருக்கிறேன் என விவரிக்கவே முடியவில்லை. என்னால் வாயை மூடிக் கொண்டு இருக்க முடியாது. தான் விரும்பும் கலைக்காக ஒட்டுமொத்த வாழ்வையும் அர்ப்பணிக்கும் பெண்களின் முகத்தில் ஒங்கி கொடுக்கப்பட்டிருக்கும் மிதி இது.

Titmus
Titmus

குழுவுணர்வு, நட்பு, அர்ப்பணிப்பு, ஒற்றுமை என எல்லாவற்றையும் கற்றுக்கொடுக்கும் விளையாட்டை விரும்பும் பெண்களின் மீதான அவமதிப்பு இது. பெண்ணின் உடலை வைத்து பணம் சம்பாதிக்கும், பெண்களில் விளையாட்டை செக்ஸாக மட்டுமே பார்க்கும் உலகத்தில் எப்படி வாழ முடியும்? இது இளம் சிறுவர்களுக்கும் சிறுமிகளுக்கும் எதை கற்றுக்கொடுக்கும்? சிட்னி ஸ்வீனி நீங்கள் இன்னும் சிறப்பான விஷயங்களை செய்யலாம்' எனக் கூறியிருக்கிறார்.

ஒலிம்பிக்ஸில் தங்கம் வென்ற பிரிட்டனைச் சேர்ந்த சைக்கிளிங் வீராங்கனை சோபி கேப்வெல், 'பொதுப் புத்தியில் விளையாட்டு வீராங்கனைகளை கவர்ச்சிப் பொருளாக அடையாளப்படுத்தும் எண்ணம் இல்லாத உலகத்தை கற்பனை செய்து பார்க்கிறேன்' என விமர்சித்திருக்கிறார்.

க்ராமர்
க்ராமர்

அமெரிக்காவை சேர்ந்த ஜிம்னாஸ்டிக் வீராங்கனை கிரேஸி க்ராமர் அவர் போட்டியில் கலந்து கொண்ட வீடியோக்களை பகிர்ந்து, 'விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொள்ளும் வீராங்கனைகள் இப்படித்தான் இருப்பார்கள்' எனக் கூறியிருக்கிறார்.

உலகெங்கும் உள்ள விளையாட்டு வீராங்கனைகளை ஸ்வினியை விமர்சிக்கவே, பதிலுக்கு ஸ்வீனி விளையாட்டு வீரர்களும் வீராங்கனைகளும் ஆடையின்றி போஸ் கொடுத்த புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்திருக்கிறார்.!

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User