வைபவ் விக்கெட்... சயீம் அயூபின் `குழந்தை' சேட்டை - நொடியில் பாடம் புகட்டிய அபிஷேக் சர்மா!

Oct 03, 2026 - 17:30
0
வைபவ் விக்கெட்... சயீம் அயூபின் `குழந்தை' சேட்டை - நொடியில் பாடம் புகட்டிய அபிஷேக் சர்மா!

ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் ஆடவர் கிரிக்கெட் இறுதிப்போட்டியில், பாகிஸ்தானை 19 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, இந்திய அணி தங்கப் பதக்கத்தை வென்றது. சனிக்கிழமை நடைபெற்ற இந்த பரபரப்பான போட்டியில், பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் இந்தியா ஆதிக்கம் செலுத்தியது. ஏற்கனவே மகளிர் அணி தங்கம் வென்றிருந்த நிலையில், ஆடவர் அணியும் தங்கத்தை வென்று இரட்டிப்பு மகிழ்ச்சியை நாட்டுக்குத் தந்துள்ளது.

வைபவ் அவுட்... எல்லை மீறிய சயீம் அயூப்!

கொரோகி ஸ்போர்ட்ஸ் பார்க் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தது. தொடக்க வீரர்களான வைபவ் சூர்யவன்ஷி மற்றும் அபிஷேக் சர்மா ஆகியோர் களமிறங்கினர்.

இளம் வீரரான வைபவ், போட்டியின் இரண்டாவது ஓவரிலேயே இரண்டு பிரம்மாண்ட சிக்ஸர்களைப் பறக்கவிட்டு தனது அதிரடி நோக்கத்தைத் தெளிவுபடுத்தினார். ஆனால், அந்த வேகம் நீண்ட நேரம் நீடிக்கவில்லை. மூன்றாவது ஓவரின் முதல் பந்தில், பாகிஸ்தான் வீரர் சயீம் அயூப் வீசிய பந்தை ரிவர்ஸ் ஸ்வீப் செய்ய முயன்றார் வைபவ். பந்து பேட்ஸ்மேனின் கையுறையில் பட்டு கீப்பரிடம் தஞ்சம் புகுந்தது. வைபவ் ஆட்டமிழந்து வெளியேறியபோது, பாகிஸ்தான் வீரர் சயீம் அயூப், 'குழந்தையைத் தாலாட்டுவது' போல சைகை செய்து, இளம் வீரரான வைபவைக் கேலி செய்தார். இந்தச் செயல் மைதானத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது.

உடனடி பதிலடி கொடுத்த அபிஷேக் சர்மா!

சயீம் அயூபின் மகிழ்ச்சி சில நொடிகள் கூட நீடிக்கவில்லை. அதே ஓவரின் அடுத்த மூன்று பந்துகளில், அபிஷேக் சர்மா தனது வெறியாட்டத்தைக் காட்டினார். ஒரு பவுண்டரி மற்றும் இரண்டு சிக்ஸர்களை விளாசி, சயீம் அயூபின் கேலிக்கு பேட் மூலம் தக்க பதிலடி கொடுத்தார். தொடர்ந்து தனது ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்திய அபிஷேக், வெறும் 20 பந்துகளில் அரைசதம் கடந்து சாதனை படைத்தார். இது டி20 போட்டிகளில் பாகிஸ்தானுக்கு எதிராக ஒரு இந்திய வீரர் அடித்த வேகமான அரைசதமாகும். மொத்தமாக 28 பந்துகளைச் சந்தித்த அவர், 3 பவுண்டரிகள் மற்றும் 7 சிக்ஸர்களுடன் 61 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User