மத்திய அரசு நிகழ்ச்சி: முதலில் பாடப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்து! - என்ன நடந்தது?

Sep 19, 2026 - 16:31
0
மத்திய அரசு நிகழ்ச்சி: முதலில் பாடப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்து! - என்ன நடந்தது?

மத்திய அரசு சார்பில் நாடு முழுவதும் 45 இடங்களில் அரசு பணிகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கான பணி நியமன ஆணைகள் வழங்கும் ‘ரோஸ்கர் மேளா’ (வேலைவாய்ப்பு முகாம்) நிகழ்ச்சி நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக, சென்னை அரும்பாக்கத்தில் நடைபெற்ற மத்திய அரசு நிகழ்ச்சியில் மத்திய இணைமைச்சர் எல். முருகன் கலந்துகொண்டு, தேர்ந்தெடுக்கப்பட்ட பயனாளிகளுக்குப் பணி நியமன ஆணைகளை வழங்கினார். மத்திய அரசின் அறிவிப்புக்குப் பிறகு, மத்திய அரசு நிகழ்ச்சிகளில் ‘வந்தே மாதரம்’ பாடல் முதலில் இசைக்கப்படும் வழக்கம் பின்பற்றப்பட்டது.

எல்.முருகன்
எல்.முருகன்

இந்த நிலையில், தமிழ்நாட்டின் பண்பாட்டு முன்னுரிமையை ஏற்கும் வகையில் சென்னை நிகழ்வில் முதன்முதலாகத் ‘தமிழ்த்தாய் வாழ்த்து’ பாடப்பட்டு விழா முறைப்படி தொடங்கப்பட்டது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு அரசு விழாக்களில் தமிழ்த்தாய் வாழ்த்திற்கு உரிய முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை எனப் பல்வேறு தரப்பில் சர்ச்சைகள் எழுந்திருந்தன. அந்தச் சூழலுக்கு மத்தியில், மத்திய அமைச்சர் எல். முருகன் பங்கேற்ற இந்த அதிகாரப்பூர்வ நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முன்னுரிமை அளித்து விழா தொடங்கப்பட்டிருக்கிறது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User