பரப்பன அக்ரஹாரா சிறை: ஆயுள் தண்டனை கைதியின் மனைவியிடம் பாலியல் சுரண்டல் - மத்திய சிறை டி.ஐ.ஜி கைது

Oct 06, 2026 - 12:30
0
பரப்பன அக்ரஹாரா சிறை: ஆயுள் தண்டனை கைதியின் மனைவியிடம் பாலியல் சுரண்டல் - மத்திய சிறை டி.ஐ.ஜி  கைது

கைதியின் மனைவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து பெங்களூரு பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையின் டி.ஐ.ஜி கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 2004-ம் சிஃபாஸ்ட் டிராக் நீதிமன்றத்தால் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட கைதி சங்கர். இவர், 2018-ம் ஆண்டு, உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு எனக் கூறி ஆவணம் ஒன்றை சமர்பித்ததன் அடிப்படையில் விடுவிக்கப்பட்டார். ஆனால் அந்த ஆவணம் போலியானது என்பது காவல் துறை விசாரணையில் தெரியவந்தது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறை, கைதி சங்கரை சிறையில் அடைத்தது. இது தொடர்பாக அவரின் மனைவியிடம் விசாரணை நடத்தப்பட்டது.

ஆயுள் தண்டனை
ஆயுள் தண்டனை

அப்போது, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையின் முதன்மை கண்காணிப்பாளராக பணியாற்றிவந்த சோமசேகர், அவரது கணவரை விடுவிப்பதாகக் கூறி அந்தப் பெண்ணை பாலியல் ரீதியாக அத்துமீறியதாக குற்றம்சாட்டப்பட்டிருக்கிறார். கைதியின் மனைவி கூறிய குற்றச்சாட்டுகள் குறித்து பரப்பன அக்ரஹாரா காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிறைத்துறை ஊழியரான ஸ்ரீகாந்த் என்பவர், சங்கருக்கு விடுதலை அளிக்கப்பட்டதாகக் காட்டும் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு என்று கூறப்படும் ஆவணத்தைப் போலியாகத் தயாரித்ததும் விசாரணையில் தெரிய வந்தது.

சங்கர் விடுதலையில் சோமசேகர் எந்த மாதிரியான உதவிகளை செய்தார் என்று விசாரித்து வந்த நிலையில், புதிய தகவலை சங்கர் மனைவி தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

பரப்பன அக்ரஹாரா சிறை வளாகம்

இதற்கிடையில், விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்ததோடு, வழக்கு தொடர்பான முக்கியத் தகவல்களை மறைக்க முயன்றதால் சோமசேகரை காவல்துறையினர் கைது செய்து காவலில் எடுத்தனர். பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, மேலும் விசாரணைக்காக போலீஸ் காவலில் ஒப்படைக்கப்பட்டுள்ளார். போலி உத்தரவு தயாரிக்கப்பட்டதன் பின்னணி மற்றும் சிறை அதிகாரியின் முறைகேடுகள் குறித்து காவல்துறையினர் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/2b963ppb

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User