ஊட்டி:‌ "நாங்கள் என்ன கிள்ளுக் கீரை‌யா?" - அலட்சிய அதிகாரிகளால் கொந்தளித்த தேயிலை விவசாயிகள்

Sep 21, 2026 - 14:01
0
ஊட்டி:‌ "நாங்கள் என்ன கிள்ளுக் கீரை‌யா?" - அலட்சிய அதிகாரிகளால் கொந்தளித்த தேயிலை விவசாயிகள்

நீலகிரி மாவட்டத்தில் சிறு, குறு தேயிலை விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்யும் பசுந்தேயிலைக்கு உரிய விலை வழங்க வேண்டும் எனக் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்து போராடி வருகின்றனர்.

சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் உரிய சட்டத்திருத்தங்கள் கொண்டு வரப்பட்டு மாவட்ட அளவிலான விலை கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டது.

மாவட்ட ஆட்சியர் தலைமையிலான இந்தக் குழு மாதந்தோறும் சிறு, தேயிலை விவசாயிகளின் பசுந்தேயிலைக்குக் கிடைக்க வேண்டிய விலையை நிர்ணயம் செய்து அறிவித்தபோதும், தனியார் தேயிலை தொழிற்சாலைகள் மாவட்ட விலை கண்காணிப்புக் குழுவின் அந்த உத்தரவுகளைச் செயல்படுத்தவில்லை என்கிற குற்றச்சாட்டுகளை விவசாயிகள் முன்வைத்து வருகின்றனர்.

விவசாயிகள்
விவசாயிகள்

இதனால், மாவட்ட ஆட்சியர் தலைமையிலான குழு கடந்த 25.10.2017-ம் தேதியில் சிறு தேயிலை விவசாயிகளுக்குக் கிடைக்க வேண்டிய பாக்கி தொகைைய அந்தந்தத் தனியார் தேயிலை தொழிற்சாலைகளின் வங்கி கணக்கிலிருந்து பிடித்தம் செய்து சிறு தேயிலை விவசாயிகளுக்கு உடனடியாக வழங்க உத்தரவிட்டது.

இதற்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கில் கடந்த ஜூன் 25- ம் தேதியன்று சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் தனியார் தொழிற்சாலைகள் பாக்கி தொகையில் 50 சதவீத தொகையை 12 வாரங்களுக்குள் சம்பந்தப்பட்ட சிறு தேயிலை விவசாயிகளுக்கு வழங்க வேண்டும் எனத் தெரிவித்திருந்தது.

இந்தச் சூழலில் ஊட்டியில் உள்ள கூடுதல் ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று முன்தினம் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவு படி சிறு தேயிலை விவசாயிகளுக்கு தனியார் தொழிற்சாலைகள் பாக்கி தொகை வழங்குவது தொடர்பான விவகாரம் எழுப்பப்பட்டது.‌

இன்ட்கோ சர்வ், தேயிலை வாரிய அதிகாரிகள் பதிலளித்துள்ளனர். அதற்கு எதிர்ப்பு தெரிவித்த விவசாயிகள், "இது குறித்து பதில் அளிக்க வேண்டிய மாவட்ட கலெக்டர், குன்னூர் தேயிலை வாரிய செயல் இயக்குநர், இன்ட்கோசர்வ் தலைமை செயல் அலுவலர் என 3 அதிகாரிகளும் கூட்டத்திற்கு வரவில்லை. தேயிலை தொடர்பான அனைத்துக் கோரிக்கைகளையும் விவாதிக்கக் கூடாது" எனத் தெரிவித்துள்ளனர் .

இதனைத் தொடர்ந்து தேயிலை தொடர்பான கோரிக்கை விவாதிக்கப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

அதிகாரிகள்
அதிகாரிகள்

இது குறித்து தெரிவித்த தேயிலை விவசாயிகள், "விவசாயிகள் குறைதீர்க் கூட்டத்திற்கு உயர் அதிகாரிகள் வருவதே இல்லை. அவர்கள் சார்பாக துறையில் உள்ள கடை நிலை ஊழியர்களை அனுப்பி வைக்கின்றனர். ஒவ்வொரு கூட்டத்திற்கும் புதிது புதிதாக அதிகாரிகள் வருகின்றனர். ஆனால் விவசாயிகளின் கோரிக்கைகளுக்குத் தீர்வு கிடைப்பதே இல்லை. விவசாயிகள் என்றால் கிள்ளுக்கீரையா‌" என்றனர்.

இது குறித்து தெரிவித நீலகிரி மாவட்ட வருவாய் அலுவலர் வாசுகி, "பொறுப்பு அமைச்சர் வருகை காரணமாக அதிகாரிகள் வரவில்லை. அடுத்த முறை துறை சார்ந்த உயர் அலுவலர்கள் வருகை உறுதி செய்யப்படும்" என்றார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User