"ஈரான் போர் முடிய 3 Optionsதான் இருக்கு; அவற்றில் ஒன்றை ட்ரம்ப் செய்யமாட்டார்" - அமெரிக்க அதிகாரி

Sep 07, 2026 - 12:30
0
"ஈரான் போர் முடிய 3 Optionsதான் இருக்கு; அவற்றில் ஒன்றை ட்ரம்ப் செய்யமாட்டார்" - அமெரிக்க அதிகாரி

ஈரான் போர் முடிவு இல்லாமல் இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

வருகிற நவம்பர் மாதம் அமெரிக்காவில் நடக்கவிருக்கும் மிட் டேர்ம் தேர்தலுக்காக எல்லாம் போரைச் சீக்கிரம் முடிக்க முடியாது என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறிவிட்டார்.

போர் எப்போது தான் முடியும் என்கிற கேள்வி உலக நாடுகளிடம் எழுந்துள்ளது. இந்தப் போர் காரணமாக உலக நாடுகளின் எரிசக்தி போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால்தான், இந்தக் கேள்வி இந்தப் போர் தொடங்கியதில் இருந்து வலுவாக ஒலித்துகொண்டு இருக்கிறது.

அமெரிக்கப் பாதுகாப்புச் செயலாளர் லியோன் பனேட்டா
அமெரிக்கப் பாதுகாப்புச் செயலாளர் லியோன் பனேட்டா
இதற்கான விடையை 'The Guardian' செய்தி நிறுவனத்திற்குத் தந்திருக்கிறார் அமெரிக்கப் பாதுகாப்புச் செயலாளர் லியோன் பனேட்டா.

"ஈரான் போர் இன்னும் ஆறு மாதங்களுக்குக்கூட தொடரலாம். இன்னொரு பக்கம், இது மத்தியக் கிழக்கில் நடக்கும் தொடர்ச்சியான போராகக் கூட மாறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

இதற்கு காரணம், இந்தப் போர் முடிவுக்கான தெளிவான பாதை இன்னும் தெரியவில்லை.

மூன்று ஆப்ஷன்ஸ்

இப்படி நடக்காமல் இருக்க வேண்டுமானால், மூன்று ஆப்ஷன்கள் மட்டுமே உள்ளன.

ஒன்று, அமெரிக்கா இந்தப் போரில் இருந்து பின்வாங்கி, இது தோல்விகரமான போர் என்று ஒப்புக்கொள்ள வேண்டும். இந்த ரூட்டை ட்ரம்ப் எடுப்பது மிக மிக கடினம்.

இரண்டாவது, தாக்குதலுக்கு அவ்வப்போது பழிக்குப் பழி என எதிர் தாக்குதல்கள் நடத்திகொள்வது. அதுதான் தற்போது நடந்துகொண்டிருக்கிறது. இந்தச் சூழலில் இரு நாடுகளுமே பேச்சுவார்த்தைக்கும் முயலாது... ஆபத்தான போரை நோக்கியும் நகராது.

மூன்றாவது, ஹார்முஸ் நீர்ச்சந்தியை முழுவதுமான அமெரிக்காவின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துவிடுவது. இதன் மூலம், ஈரான் அந்த நீர்ச்சந்தியைக் கட்டுப்படுத்துவதை முழுவதுமாகத் தடுக்க முடியும்" என்று பேசியிருக்கிறார் லியோன் பனேட்டா.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User