‘அண்ணாமலை தன் அறிவுஜீவித்தனத்தை அமித் ஷா மோடியிடம் காட்டுவதோடு நிறுத்திக்கொள்ள வேண்டும்’ - காங்கிரஸ்
"பா.ஜ.க தலைவர்களிடம் பம்மாத்து காட்ட மட்டும் பயன்படுத்துங்கள். பா.ஜ.க-வின் பின் ஒளிந்து கொண்டு அறிவுஜீவியாக காட்டிக்கொண்ட அண்ணாமலையின், உங்கள் அறிவுஜீவி சாயம் வெளுத்துக்கொண்டிருக்கிறது" எனச் சாடியிருக்கிறார் காங்கிரஸ் கமிட்டியின் மாநிலப் பொதுச் செயலாளர் கணபதி சிவக்குமார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வீ தி லீடர்ஸ் என அமைப்பை நடத்தி, அமித் ஷாவால் கொடுக்கப்பட்ட அசைன்மண்டை நல்லபிள்ளையாக செய்து காட்ட வேண்டும் என துடிக்கும் தம்பி அண்ணாமலை எதையும் ஆராய்ந்து தெளிவாக பேச வேண்டும். காங்கிரஸ் எப்போது போராட வேண்டும், எப்படி போராட வேண்டும் என விமர்சிக்கும் அளவு நீங்கள் இன்னும் வளரவில்லை. அதற்கான போதிய அறிவோ அல்லது ஆராய்ச்சியோ கூட தங்களிடம் இல்லை என்பது உங்கள் பேச்சிலிருந்து அப்பட்டமாக தெரிகிறது.

ஜனநாயகத்தை பற்றியும், அரசியலமைப்பை பற்றியும், சமூகநீதியை பற்றியும் கொஞ்சமும் அறியாத பா.ஜ.க-வின் பாசறையில் உருவாக்கப்பட்ட அண்ணாமலை மோடியிடம் உங்கள் விசுவாசத்தை காட்டுவதற்காக, தேசம் காக்கும் போராட்டத்தை கொச்சைப்படுத்தும் உங்களது முட்டாள்தனமான கருத்துகளுக்கான விளைவுகள் மோசமானதாக இருக்கும். உங்கள் இரட்டை நாக்கின் விஷம வார்த்தைகளை அமித்ஷா, மோடி, பா.ஜ.க தலைவர்களிடம் பம்மாத்து காட்ட மட்டும் பயன்படுத்துங்கள். பா.ஜ.க-வின் பின் ஒளிந்து கொண்டு அறிவுஜீவியாக காட்டிக்கொண்ட அண்ணாமலையின், உங்கள் அறிவுஜீவி சாயம் வெளுத்துக்கொண்டிருக்கிறது என்பது காங்கிரஸ் நடத்தும் எஸ்.ஐ.ஆர் போராட்டம் குறித்த உங்கள் கோமாளித்தனமான கேள்வியில் இருந்து புரிகிறது.
எஸ்.ஐ.ஆர்-ல் மற்ற இரு தேர்தல் ஆணையர்களின் முரண்பட்ட கருத்து குறித்த செய்திகள் வெளிவந்ததே தேர்தலுக்கு பின்தான். இதை தெரிந்துதான் அப்படி பேசினீர்களா அண்ணாமலை? இதுதான் உங்கள் தராசு தட்டா? அதனால்தான் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தியின் வழியில் காங்கிரஸ் கட்சி தேசம் காக்க போராடி வருகிறது. எஸ்.ஐ.ஆர் அவசரமாக அறிவிக்கப்பட்டது முதல் இந்தியா கூட்டணி அதை கடுமையாக எதிர்த்து வரும் நாடறிந்த செய்தி. அறிவுஜீவி அண்ணாமலைக்கு மட்டும் தெரியாமல் போனது ஆச்சர்யம் தான்.
ஒருவேளை அப்போதெல்லாம் வீட்டில் படுத்து தூங்கிக் கொண்டிருந்தீர்களோ? பயங்கர அறிவாளியான உங்கள் விமர்சனங்களுக்கு பதில் சொல்லவே சற்று பயமாக தான் இருக்கிறது. ஆனால் என்ன செய்வது நானும் ரௌடிதான் நானும் ரௌடிதானு வடிவேலு வண்டியில் ஏறுவதுபோல் ஏறியதால் உங்களுக்கெல்லாம் கண்டனம் தெரிவிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுவிட்டதை எண்ணி சற்று வருத்தத்ததுடன் கண்டனத்தையும் பதிவு செய்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0
Comments (0)