நீட் தேர்வுக்குத் தயாராக இருந்த நிலையில், விபரீத முடிவெடுத்த மாணவி - பாலக்கோட்டில் சோகம்!

Jun 21, 2026 - 19:00
0
நீட் தேர்வுக்குத் தயாராக இருந்த நிலையில், விபரீத முடிவெடுத்த மாணவி - பாலக்கோட்டில் சோகம்!

இன்று நடைபெறும் நீட் தேர்வில் பங்கேற்க இருந்த மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம், தருமபுரி மாவட்டத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தற்கொலை
தற்கொலை

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகிலுள்ள எண்டப்பட்டிய கிராமத்தைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் சர்க்கரை ஆலை ஊழியர். இவர் மகள் ரோஷ்னி. இரண்டாண்டுகளுக்கு முன் பிளஸ் டூ முடித்தவர், மருத்துவம் படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தால் நாமக்கல்லில் உள்ள நீட் பயிறசி மையத்தில் சேர்ந்து படித்து வந்துள்ளார்.

இந்த நிலையில் நீட் மறுதேர்வு எழுதத் தயாராகி வந்த நிலையில் நேற்று ஊருக்கு வந்தவர், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த ரோஷ்னியின் பெற்றோரும், உறவினர்களும் பாலக்கோடு காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். அதைத்தொடர்ந்து ரோஷ்னியின் உடல், உடற்கூறாய்வாக்காக தருமபுரி அரசு மருத்துக் கல்லூரி மருத்துவமனக்கு கொண்டு செல்லப்பட்டது.

நீட் தேர்வு
நீட் தேர்வு

நீட் தேர்வு குறித்த அச்சத்தினால்தான் தற்கொலை செய்துகொண்டாரா? அல்லது வேறு ஏதும் காரணமா என்ற கோணத்திலும் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பாலகோடு பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் நீட் தேர்வு அச்சம் காரணமாக தமிழ்நாட்டில் 3 பேர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User