"என்ன பெத்த தாயை தவறா பேசும்போது கூட பொறுத்துகிட்டேன், ஆனா..!"- திமுகவை காட்டமாக விமர்சித்த விஜய்
அக்டோபர் 6 ஆம் தேதி மதுராந்தகம், தாராபுரம் தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்நிலையில் மதுராந்தகம் தொகுதி வேட்பாளர் மரகதம் குமரவேலை ஆதரித்து முதல்வர் விஜய் இன்று பரப்புரை மேற்கொண்டிருக்கிறார்.
மேடையில் பேசிய முதல்வர் விஜய், "நான் இன்றைக்கு முதல்வராக இங்கு வரவில்லை. இடைத்தேர்தலுக்காக ஓட்டு கேட்டு வந்திருக்கிறேன். உங்கள் வீட்டுப் பிள்ளையாக, மகனாக வந்திருக்கிறேன். உங்களிடம் ஒரே ஒரு கேள்விதான் கேட்க வேண்டும். ஏன் உங்கள் விஜய் ஆட்சிக்கு வரக் கூடாதா?

உங்கள் தவெக ஆட்சிக்கு வரக் கூடாதா? ஒரு தனிக்கட்சியாக, சாமானியர்களின் கட்சியாக, ஊழலை ஒழிக்கும் ஒரு கட்சியாக, உங்கள் விஜய் வரக் கூடாதா? இந்த தீயசக்தி திமுக நம்மை பார்த்து அவதூறாக, அசிங்கமாக, ஆபாசமாகப் பேசுகிறார்கள். இன்று நான் சினிமாவில் வென்றதற்கும், அரசியலில் வென்றதற்கும் தமிழ்நாட்டு மக்கள்தான் காரணம்.
திமுக-வினர் அவதூறாகப் பேசிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு மறைமுகமாக மற்றும் பலர் (அதிமுக) ஆதரவு கொடுத்துகொண்டிருக்கிறார்கள். ஜெயலலிதா அவர்களைத் தவறாகப் பேசியவர்கள் உடன் கூட்டணி பேசும்போதே அவர்களின் திட்டம் என்னவென்று தெரிந்துவிட்டது. அவர்கள் முகமூடி கிழிந்துவிட்டது என்று தெரியாமலேயே கூவிக்கொண்டிருக்கிறார்கள்.
இந்த இடைத்தேர்தலில் உங்கள் சகோதரி, என் தங்கைக்கு, மரகதம் குமரவேல் அவர்களுக்கு தயவு செய்து விசில் சின்னத்தில் ஓட்டு போடுங்கள். இந்த மற்றும் பலர் பாஜகவின் ஒரு கிளை. ஆனால் இப்போது திமுகவின் ஒரு கிளை கழகமாக மாறிவிட்டார்கள். மக்கள் காசை தொட விடமாட்டோம். தொட்டவர்களையும் விட மாட்டோம்.

சட்டமன்றத்தில் ஊழல் என்று சொன்னால்போதும்... உடனே ஆதாரத்தைக் காட்டு என்று சொல்வார்கள். ஆதாரத்தை எடுத்துக் காட்டினால் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படவில்லை என்று சொல்வார்கள். பேசு, பேசு என்று சொல்வார்கள். அப்படி நான் பேசினால் பேச விடமாட்டார்கள். 30, 35 வருடமாக எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டுதான் அரசியலுக்கு வந்திருக்கிறேன். அதனால் எனக்கு புதிதாக தோன்றவில்லை.
ஊழல் செய்த திமுக-வை விடமாட்டோம். இதுவரைக்கும் ஊழலே செய்யவில்லை என்று உங்களால் சொல்லமுடியுமா? 'என்னப்பா நீ ஸ்டாலின் சார் பற்றியே கேள்வி கேட்கிற அவரே பாவம்... இப்போது எதிர்க்கட்சித் தலைவராகக்கூட இல்லை' என்று சில விமர்சனங்கள் எல்லாம் வருகின்றன. தோற்றாலும், ஜெயித்தாலும் ஸ்டாலின் என்னுடைய அங்கிள். அவர் என்னுடைய ஸ்வீட் அங்கிள். இரண்டே பேருக்கு நடுவில்தான் போட்டியே. ஒன்று தூய சக்தி தவெக, மற்றொன்று தீய சக்தி திமுக.
நாங்கள் அரசியலுக்கு குழந்தை தான். தமிழ்நாட்டு மக்களுக்கு குழந்தை. திமுகவும், திமுகவும் தலைமையும் தான் நமக்கு போட்டியே. நமது கேள்வி எப்போதும் ஸ்டாலின் சாருக்கு மட்டுமே. மக்களுக்கு நல்லது செய்யவே கடன் வாங்குகிறேன். கொள்ளையடிப்பதற்காக அல்ல. ஆமாம் ஆறு சிலிண்டர் கொடுக்கிறேன் என்று சொன்னேன். என்னால் இப்போது மூன்று சிலிண்டர் தான் கொடுக்க முடிந்தது. மக்களிடம் ஏத்தி விடுகிறார்கள். ஆனால் மக்கள் நம் வீட்டு பிள்ளை விஜய் கொடுக்கும். நீங்கள் பதறாதீர்கள் என்று முகத்தில் கரியை பூசி விட்டார்கள். நான் வளர்ச்சிக்கு எதிரானவன் இல்லை.
என்னால் எதைச் செய்ய முடியுமோ அதைச் செய்து வருகிறேன். உங்கள் கணக்கு எல்லாம் ஒண்ணுதுக்கும் ஆகாத மன கணக்கு. எனக்கும் தமிழ்நாட்டு மக்களுக்கும் உள்ளது அன்பு கணக்குஎப்போது பார்த்தாலும் பாஜக உள்ளே வந்துவிடும் என்று பூச்சாண்டி காட்டிக்கொண்டுள்ளனர். திமுக வேற பாஜக வேற இல்லை. டெல்லயில் இருக்க திமுகவிற்கு பெயர்தான் பாஜக. தமிழ்நாட்டில் இருக்க பாஜகவிற்கு பெயர்தான் திமுக.

எம்.ஜி ஆர், ஜெயலலிதா தீயசக்தியை எதிர்த்தவர்கள். எம்.ஜி ஆர் தொண்டர்களே பயப்படாதீர்கள் உங்களுடன் இந்த விஜய் இருப்பான். ஸ்டாலின் சார் உங்களுக்கு தைரியம் இருந்தால் திமுக, அதிமுக,பாஜக எல்லோரும் ஒன்றுதான் என்று சொல்லி தேர்தலில் நிற்க வேண்டியதுதானே.
மக்களே இந்த திமுகவையும், மற்றும் பலரையும் ஓரம் கட்ட தயவு செய்து விசில் சின்னத்திற்கு ஓட்டு போடுங்கள். திமுக என்ன பெத்த தாயை தவறாகப் பேசும்போது கூட நான் பொறுத்துக்கொண்டேன். ஆனால் தமிழ்நாட்டு பெண்களை அசிங்கமாக பேசும்போதுதான் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. மரகதம் குமரவேலை பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வையுங்கள்" என்று பேசியிருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/2b963ppb
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0
Comments (0)