TVK: "பெண்களுக்கு பாதுகாப்பு சூழலையும் ஏற்படுத்தி தர வேண்டும்!" - நடிகர் ராமராஜன்

May 05, 2026 - 18:32
0
TVK: "பெண்களுக்கு பாதுகாப்பு சூழலையும் ஏற்படுத்தி தர வேண்டும்!" - நடிகர் ராமராஜன்

சட்டமன்ற தேர்தலில், தமிழக வெற்றிக் கழகம் தனிபெருங்கட்சியாக வென்றிருக்கிறது. மொத்தமாக 108 தொகுதிகளை வென்றிருக்கிறது விஜய்யின் தவெக.

தவெக-வின் வெற்றிக்கு தமிழக திரைத்துறையினர் பலரும் வாழ்த்துகள் தெரிவித்து வருகிறார்கள். நடிகர்கள் சிலரும் தவெக-விற்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொண்டிருந்தார்கள்.

தவெக தலைவர் விஜய்
தவெக தலைவர் விஜய்

நடிகர் ராமராஜனும் தவெக-விற்காக ஆலங்குளம் தொகுதியில் பிரசாரம் மேற்கொண்டிருந்தது நினைவிருக்கலாம்.

அவர் இப்போது விஜய்க்கு வாழ்த்து தெரிவித்து அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.

அதில் அவர், "நடைபெற்று முடிந்த தமிழக சட்டசபைத் தேர்தலில் திரைத்துறையில் இருந்து வந்து குறுகிய காலத்தில் கட்சி தொடங்கி, முதன்முதலாக தேர்தலை சந்தித்து அதில் மக்களின் ஏகோபித்த பேராதரவைப்பெற்று தமிழக முதல்வராக பதவியேற்க இருக்கும் என் துறை சார்ந்த இனிய சகோதரர், தமிழக வெற்றிக் கழக தலைவர் திரு. விஜய் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

ராமராஜன்
ராமராஜன்

மக்கள் தங்கள் மீது வைத்திருக்கும் அன்புக்கும், நம்பிக்கைக்கும் உரித்தாக நல்லதொரு மக்களாட்சியை நிகழ்த்தி சாதி-மத வேறுபாடற்ற , லஞ்ச லாவண்யமற்ற நிர்வாகத்தையும், அனைவருக்கும் பாதுகாப்பான அரசாகவும், கொலை, கொள்ளை, போதை கலாச்சாரம், போன்றவற்றை அறவே இல்லாமல் ஒழித்து, அனைத்து துறைகளிலும் பெண்கள் தைரியமாக சென்று வென்று வரக்கூடிய பாதுகாப்பு சூழலையும் ஏற்படுத்தி, படித்தோருக்கு உரிய வேலைவாய்ப்பினை உருவாக்கி எல்லா தரப்பு மக்களும் பயன் தரும் வாழும் மாநிலம் " தமிழகம்" என்ற நிலைக்கேற்ப சிறந்ததொரு புதிய யுக்தி ஆற்றலை கையிலெடுத்து புரட்சி கரமான ஆட்சி செய்திட இந்த அண்ணனின் அன்பான வாழ்த்துக்கள்!" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User