"இதற்கு முன் இதுபோல் நடந்ததில்லை, இனிமேலும் நடக்கப்போவதில்லை"- விஜய்யை வாழ்த்திய ஜி.வி பிரகாஷ்

May 04, 2026 - 14:02
0
"இதற்கு முன் இதுபோல் நடந்ததில்லை, இனிமேலும் நடக்கப்போவதில்லை"- விஜய்யை வாழ்த்திய ஜி.வி பிரகாஷ்

தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளுக்கு கடந்த மாதம் 23ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது.

திமுக, அதிமுக, நாம் தமிழர், த.வெ.க என 4 முனைப் போட்டி நிலவிய நிலையில், பதிவான வாக்குகள் மாநிலம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 62 மையங்களில் எண்ணப்பட்டு வருகின்றன.

தமிழகத்தின் பல முக்கியத் தொகுதிகளில் திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு பெரும் திராவிடக் கட்சிகளையும் பின்னுக்குத் தள்ளி த.வெ.க முன்னிலை வகிக்கிறது.

தவெக விஜய்
தவெக விஜய்

இந்நிலையில் த.வெ.க தலைவர் விஜய்யை வாழ்த்தி இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி. பிரகாஷ் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்கிறார்.

அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், "வாழ்த்துகள் விஜய் அண்ணா. இது ஒரு மிகப்பெரிய வெற்றி. இதற்கு முன்னும் இதுபோல் நடந்ததில்லை, இனிமேலும் நடக்கப்போவதில்லை. ஒரு வரலாற்று வெற்றி" என்று பதிவிட்டிருக்கிறார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User