"தற்போதைய ஆட்சி நீடிக்காது; காரணங்களைப் பொதுவெளியில் சொல்ல முடியாது"- டி.ஆர்.பாலு கூறியதென்ன?

Jun 05, 2026 - 12:02
0
"தற்போதைய ஆட்சி நீடிக்காது; காரணங்களைப் பொதுவெளியில் சொல்ல முடியாது"- டி.ஆர்.பாலு கூறியதென்ன?

கலைஞரின் 103-வது பிறந்தநாள் விழா நேற்று (ஜூன்.4) அம்பத்தூரில் நடைபெற்றது.

இதில் உதயநிதி ஸ்டாலின், அ.ராசா, டி.ஆர்.பாலு ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

இதில் கலந்துகொண்டு பேசிய டி.ஆர் பாலு, " தளபதியால் (ஸ்டாலின்) இன்று சட்டமன்றத்திற்குள் செல்ல முடியவில்லை.

ஸ்டாலின்
ஸ்டாலின்

மாற்றம் நிகழும் நேரத்தில் மிகப்பெரிய வெற்றி நம்மை வந்து சேரும். கவலைப்பட வேண்டாம் 69 ஆண்டுகள் இந்த இயக்கத்தில் பணியாற்றியவன் என்ற முறையில் சொல்கிறேன் நம்முடைய நண்பர்கள் கலங்காமல் இருக்க வேண்டும்.

தேர்தலுக்கு முன்பு எல்லோரும் மகிழ்ச்சியோடு இருந்தீர்கள், இன்று நீங்கள் சோகத்தில் இருக்கிறீர்கள். அதற்கு அவசியமே கிடையாது. அப்படிப்பட்ட நிலை உங்களுக்கு தேவையில்லை.

நம்மை ஆளுவதற்கு, வழிநடத்துவதற்கு நம் தளபதி இருந்துகொண்டிருக்கிறார். அவரது தலைமையில் போரிடுவதற்கும், எதிரிகளை சாய்ப்பதற்கும் ஒவ்வொருவரும் தயாராக இருக்க வேண்டும். தொடர்ந்து பணியாற்றுங்கள்.

டி.ஆர்.பாலு
டி.ஆர்.பாலு

விரைவில் இந்த நிலை மாறும். தற்போதைய ஆட்சி நீடிக்காது. அதற்கான வாய்ப்புகள் நிறைய இருக்கிறது. காரணங்களைப் பொதுவெளியில் சொல்ல முடியாது. தனியாக வந்து கேளுங்கள்" என்று பேசியிருக்கிறார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User