SRH vs PBKS:"பஞ்சாப்பை வீழ்த்தி முதலிடம்; அதிரடி ஆட்டமே எங்களின் ரகசியம்!"– பேட் கம்மின்ஸ் பெருமிதம்

May 07, 2026 - 12:01
0
SRH vs PBKS:"பஞ்சாப்பை வீழ்த்தி முதலிடம்; அதிரடி ஆட்டமே எங்களின் ரகசியம்!"– பேட் கம்மின்ஸ் பெருமிதம்

ஐபிஎல் 2026-ன் நேற்றைய (மே 6) விறுவிறுப்பான ஆட்டத்தில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின.

புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் இருந்த பஞ்சாப் அணியை வீழ்த்தி, ஹைதராபாத் அணி அபார வெற்றி பெற்றது.

இந்த வெற்றிக்குப் பிறகு ஹைதராபாத் கேப்டன் பேட் கம்மின்ஸ் தனது கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார்.

SRH vs PBKS
SRH vs PBKS

வெற்றி குறித்து பேட் கம்மின்ஸ், "பஞ்சாப் அணி மிகவும் வலிமையான ஒரு அணி. அவர்களுக்கு எதிராக எங்கள் பேட்டர்கள் அதிரடியாக விளையாடி ரன் சேர்த்த விதம் மிகச்சிறப்பானது.

எவ்வளவு பெரிய ஸ்கோர் எடுத்தாலும், பஞ்சாப் போன்ற ஒரு அணிக்கு எதிராகப் பந்துவீசி வெற்றி பெறுவது எளிதல்ல; ஆனால் எங்கள் பந்துவீச்சாளர்கள் இன்று மிகத் துல்லியமாகச் செயல்பட்டார்கள்.

நாங்கள் எப்போதும் எங்களது வேகத்திலேயே விளையாட விரும்புகிறோம். ஆரம்பத்தில் நிதானமாக ஆடுவது அபிஷேக் அல்லது டிராவிஸ் ஹெட்டின் ஸ்டைல் கிடையாது. ஒரு குறிப்பிட்ட ஸ்கோரை இலக்காக வைக்காமல், எவ்வளவு அதிக ரன்கள் எடுக்க முடியுமோ அவ்வளவு ரன்களை எடுக்கவே நாங்கள் முயல்கிறோம்.

எங்கள் சொந்த மைதானத்தில் இரவு நேரங்களில் விளையாடுவது எங்களுக்கு நன்றாகப் பொருந்துகிறது. கடந்த சில ஆண்டுகளாகவே இங்கு நாங்கள் சிறப்பாக விளையாடி வருகிறோம்.

இன்றைய ஆடுகளம் பந்துவீச்சாளர்களுக்குச் சற்று ஒத்துழைத்தது, அது எங்கள் பந்துவீச்சாளர்களுக்குப் பயனுள்ளதாக அமைந்தது. ஆட்டத்தின் போக்கிற்கு ஏற்ப எங்களால் எந்தச் சூழலிலும் எளிதாக மாற முடிகிறது.

SRH vs PBKS
SRH vs PBKS

தனிப்பட்ட முறையில் எனது பந்துவீச்சு இன்று மகிழ்ச்சி அளிக்கிறது. பவர்பிளே ஓவர்களில் விக்கெட் எடுப்பது சவாலாக இருந்ததால், இன்று சில புதிய திட்டங்களைச் செயல்படுத்தினோம்.

குறிப்பாக நான் வீசிய பவுன்சர்கள் நல்ல பலன் கொடுத்தன. எங்களிடம் நிதிஷ் ரெட்டி போன்ற ஆல்-ரவுண்டர்கள் இருப்பதால் பந்துவீச்சில் நிறைய வாய்ப்புகள் உள்ளன.

தற்போது நாங்கள் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறோம். இந்த இடைவேளையில் முதலிடத்தில் இருப்பதை ரசித்துவிட்டு, அடுத்து வரும் போட்டிகளிலும் இதே உத்வேகத்துடன் விளையாடுவோம்," என அவர் தெரிவித்தார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User