Jailer 2: 'மிஸ் டெல்லி... கதக் நடனம்...' - 'ஜெயிலர் 2' டிரெய்லரில் கவனம் ஈர்த்த Apeksha Porwal யார்?

Oct 07, 2026 - 08:01
0
Jailer 2: 'மிஸ் டெல்லி... கதக் நடனம்...' - 'ஜெயிலர் 2' டிரெய்லரில் கவனம் ஈர்த்த Apeksha Porwal யார்?

ரஜினிகாந்த் நடிப்பில், நெல்சன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் 'ஜெயிலர் 2' படத்தின் டிரெய்லர் நேற்றைய தினம் வெளியானது.

படத்தைப் பற்றிய பல்வேறு தகவல்களையும், படத்தில் நடித்திருக்கும் நடிகர்கள் பற்றியும் இதில் தெரியப்படுத்தியிருக்கிறார்கள்.

இந்த டிரெய்லரில் ஆக்ஷன் காட்சிகள் மூலம் நம் கவனத்தை ஈர்த்திருந்தார் நடிகை அபிக்ஷா போர்வால். யார் இவர் என்பதை இங்கு பார்ப்போமா...

Apeksha Porwal - Jailer 2
Apeksha Porwal - Jailer 2

2017-ஆம் ஆண்டில் 'மிஸ் திவா' போட்டியில் பட்டம் வென்றவர் அபிக்‌ஷா போர்வால். அதுமட்டுமல்லாமல், மிஸ் டெல்லி பட்டத்தையும் வென்றிருக்கிறார். மாடலிங் துறையில் இயங்கி வந்தவர், நடிப்பின் மீதி பெரிய ஆர்வம் கொண்டிருக்கிறார்.

பிறகு, முறைப்படி தற்காப்பு கலைகள் மற்றும் கதக் நடனம் ஆகியவற்றைப் கற்றுக் கொண்டிருக்கிறார்.

'உண்டேகி' என்கிற தொடர் மூலமாக சினிமாவில் களம் கண்டார். அதில் இவரது நடிப்பு பரவலான பாராட்டுகளைப் பெற்றது.

அதைத் தொடர்ந்து 'ஹனிமூன் போட்டோகிராஃபர்', 'சால்ட் சிட்டி', 'பதாய் தோ' உள்ளிட்ட பாலிவுட் படைப்புகளில் நடித்து மக்களிடையே தன்னைப் பரிச்சயமாக்கிக் கொண்டார்.

Apeksha Porwal - Jailer 2
Apeksha Porwal - Jailer 2

தற்போது 'ஜெயிலர் 2' படத்தின் மூலம் தென்னிந்திய சினிமாவுக்கு அறிமுகமாகிறார். சமீபத்தில் வெளியான டிரெய்லரில், இவருடைய ஆக்ஷன் ஸ்டண்ட் காட்சிகள் இணையத்தில் வைரலாகி, ரசிகர்கள் மத்தியில் 'யார் இந்த நடிகை?' என்கிற கேள்வியை ஏற்படுத்தியிருக்கின்றன.

பாலிவுட்டில் மாடலாகத் தொடங்கி, ஓடிடியில் கவனம் ஈர்த்து, தற்போது ரஜினிகாந்தின் 'ஜெயிலர் 2' படத்தின் மூலம் இந்திய அளவிலான கவனத்தைப் பெற்றிருக்கிறார் அபிக்‌ஷா போர்வால்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User