"எல்லா அழுத்தங்களிலும் RCB ஆதரவு தந்திருக்கிறது; இதுதான் என் வீடு" - விராட் கோலி நெகிழ்ச்சி

Jun 09, 2026 - 15:30
0
"எல்லா அழுத்தங்களிலும் RCB ஆதரவு தந்திருக்கிறது; இதுதான் என் வீடு" - விராட் கோலி நெகிழ்ச்சி

'ஈசாலா கப் நம்தே' என்ற வாசகத்தோடு கடந்த 17 வருடங்களாக ஒரு முறை கூட கோப்பையை வெல்ல முடியாமல் தவித்து வந்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி கடந்த சீசனில் தனது முதல் கோப்பையை முத்தமிட்டிருந்தது.

இதனைத்தொடர்ந்து சமீபத்தில் நடந்த முடிந்த ஐபிஎல் தொடரிலும் கோப்பையைத் தக்கவைத்து, தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக சாம்பியன் என்ற வரலாற்றுச் சாதனையை நிகழ்த்தியது.

ஆர்சிபி
ஆர்சிபி

பல வருடங்களாக விமர்சனங்களை மட்டுமே சந்தித்து வந்த ஒரு அணி, பேக்-டு-பேக் கோப்பைகளை வென்று சாதித்து பலரது பாராட்டுகளையும் பெற்றிருந்தது.

இந்நிலையில் விராட் கோலி அணியின் வெற்றி குறித்து வீடியோ ஒன்றை தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து பதிவு ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார். அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், "நம்பிக்கையுடன் இந்தச் சீசனைத் தொடங்கினோம். மீண்டும் சாம்பியனாக இந்தத் தொடரை நிறைவு செய்தோம்.

இந்த அணி எல்லா அழுத்தங்களிலும், கடினமான சூழல்களிலும், சந்தோஷங்களிலும் ஒன்றாக இருந்து அதரவளித்துள்ளது. இது மிகவும் ஸ்பெஷலாக உணர வைக்கிறது. ஏனெனில் இதுதான் என் வீடு" என்று நெகிழ்ச்சியாகப் பதிவிட்டிருக்கிறார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User