"கவிஞர்கள் ஒரு வரியை இருமுறை ஆழமாக சொல்வது வழக்கம்" - கே.என்.நேருவுக்கு விஸ்வநாதன் பதில்

Aug 27, 2026 - 12:31
0
"கவிஞர்கள் ஒரு வரியை இருமுறை ஆழமாக சொல்வது வழக்கம்" - கே.என்.நேருவுக்கு விஸ்வநாதன் பதில்

சட்டமன்றத்தில் சில தினங்களுக்கு முன்பு உயர்கல்வித்துறை மானிய கோரிக்கை விவாதத்தின்போது அமைச்சர் விஸ்வநாதன் கவிதை நடையில் பேசினார்.

ஒரே வார்த்தையையும், வரியையும் இருமுறை கூறி வந்தார். அப்போது, "நீங்கள் எவ்வளவு பெரிய கவிஞராக இருக்கலாம், ஆனால் இப்படி ஒரே வார்த்தையை இரண்டு முறை கூறினால் உறுப்பினர்கள் எப்போது பேரவையில் இருந்து கிளம்புவது?" என்று கே.என்.நேரு கேள்வி எழுப்பினார். இதுதொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி இருந்தன.

கே.என்.நேரு
கே.என்.நேரு

இந்நிலையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் விஸ்வநாதனிடம் கே.என்.நேரு கேள்வி எழுப்பியது குறித்து கேட்கப்பட்டிருக்கிறது.

அதற்கு பதிலளித்த அவர், "பொதுவாக தமிழில் கவிஞர்கள் ஒரு வரியை இரண்டு முறை ஆழமாக சொல்வது என்பது வழக்கம். அது மரபும் கூட.

கவிஞர் வாலியில் இருந்து கண்ணதாசன் வரை பல கவிஞர்கள் அந்த ஓரடி கவிதையை இரண்டு முறை உச்சரிப்பது என்பது வழக்கம். ஆனால் நான் கவிஞர் அல்ல.

சட்டமன்றத்தில் படிக்கும்போது அதை நான் முன்மொழிந்தேன் அவ்வளவுதான்.

அண்ணன் கே.என் நேருவுக்கு ஒரு வகையில் அது பிரச்னையாகத் தோன்றுகிறது.

அமைச்சர் விஸ்வநாதன்
அமைச்சர் விஸ்வநாதன்

அதனால் சட்டமன்றத்தில் அவர் கேள்வி எழுப்பினார். ஆனால் எங்களுக்கு அது ஒரு பிரச்னையாகத் தோன்றவில்லை.

நாங்கள் என்ன நினைக்கிறோமோ அதை சட்டமன்றத்தில் சொல்கிறோம்" என்று விளக்கம் அளித்திருக்கிறார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User